Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ரணில் - சஜித் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட தினேஷ், ராஜபக்ஷக்களின் அடியாளா?

T

The Leader Desk

செப்டம்பர் 14, 2019 • 6:02 AM

ரணில் - சஜித் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட தினேஷ், ராஜபக்ஷக்களின் அடியாளா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மிகவும் தீர்க்கமான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஹட்டன் நெஷனல் வங்கியின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, ராஜபக்க்ஷகளின் ஆளா என்ற கடுமையான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான ஐ.தே.கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.
  • கரு ஜயசூரியவை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தினேஷ் வீரக்கொடி கூறியுள்ளார்.
  • இதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் நூற்றுக்கு 95 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழுத்து அளவு:

மிகவும் தீர்க்கமான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட  ஹட்டன் நெஷனல் வங்கியின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, ராஜபக்க்ஷகளின் ஆளா என்ற கடுமையான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான ஐ.தே.கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

தினேஷ் வீரக்கொடியை எந்த அடிப்படையில்  ரணில் - சஜித் பேச்சுவார்த்தையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்?  என்பது தொடர்பில் theleader.lkகேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். திணேஷ் வீரக்கொடியை இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது பிரதமரே என பெயர் கூற விரும்பாத அந்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தினேஷ் வீரக்கொடி சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

“எமக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய தினேஷ் வீரக்கொடி சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பிரதமரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அவருக்கு ஜனாதிபதியாகுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் கணக்கெடுப்பு அறிக்கைகளை எடுத்துக் காட்டியுள்ளார்”

“கோத்தா தோற்பது கருவிடம் மாத்திரமே - ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது” என்ற தலைப்பில் சில இணையத்தளங்களில் செய்திகளை வெளியிட்டிருப்பதும் இந்த பேச்சுவார்த்தையின் பின்னராகும்.

கரு ஜயசூரியவை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தினேஷ் வீரக்கொடி கூறியுள்ளார். அப்போது மக்கள் விடுதலை முன்னணியினதும், சிவில் அமைப்புக்களினதும் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெளிவு படுத்தியுள்ளார்.

இதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் நூற்றுக்கு 95 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமா் ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவுக்கு அபேட்சகர் நியமனத்தை வழங்குவதற்கு ஆயத்தமாகியுள்ளதாகவும், ஞாயிறு அனைத்து நடவடிக்கைகளையும் முடிப்பதற்கு பிரதமர் இணங்கியுள்ளார்.  இவ்வாறிருக்கும் போது திணேஷ் வீரக்கொடி கடும் சதியினைச் செய்வதற்கு முயற்சிக்கின்றார்.

இதனால்தான் தினேஷ் வீரக்கொடி ராஜபக்ஷக்களின் அடியாளா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. சஜித் வேட்பாளராகப் போட்டியிடுவதைத் தடுப்பதே ராஜபக்ஷக்களின் முயற்சியாக உள்ளது. திணேஷ் வீரக்கொடி தெளிவாகவே செய்வது ராஜபக்ஷக்களின் கொந்தராத்துக்களையேயாகும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...