Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

பிரதமரின் சவாலை வெற்றி கொள்வதற்கு சஜித் கடும் முயற்சியில்!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2019 • 5:46 PM

பிரதமரின் சவாலை வெற்றி கொள்வதற்கு சஜித் கடும் முயற்சியில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனடிப்படையில் அந்தக் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு இரு தரப்பினருக்குமிடையில் இதன் போது இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
  • இன்று இடம்பெற்றது வெற்றிகரமான பேச்சவார்த்தையாகும்” எனத் தெரிவித்தார்.
  • பேச்சுவார்த்தையின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இதில் கலந்து கொண்ட அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார “எம்முடன் தொடர்புடைய ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இறுதி தீா்மானத்திற்கு வருவோம்.
எழுத்து அளவு:

மற்றும் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் அலறி மாளிகையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் போது பிரதமர் விடுத்த சவாலை வெற்றிகொள்வதற்கு சஜித் பிரேமதாச நேற்றைய தினத்திலும் கூட பெரும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதன் பெறுபேறுகளை அடுத்த சில தினங்களில் நாடே அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அவருக்கு நெருக்கமான சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டுமாயின் ஐ.தே.கட்சிக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புக்கள் அவருக்கு கிடைக்க வேண்டும் என இந்த பேச்சுவார்த்தையின் போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக பீபீசி சிங்கள சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஐ.தே.கட்சிக்கு சிறுபான்மை மக்களது வாக்குகள் செல்வாக்கைச் செலுத்துமான என்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்திய பிரதமர், தற்போது நாட்டினுள் பிரதானமாக இரண்டு முகாம்களாக வாக்குகள் பிரிந்துள்ளதற்கு அமைய வேட்பாளர் யாராக இருந்தாலும் அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பின்றி அவரால் வெற்றி பெற முடியாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் அந்தக் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு இரு தரப்பினருக்குமிடையில் இதன் போது இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இதில் கலந்து கொண்ட அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார “எம்முடன் தொடர்புடைய ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இறுதி தீா்மானத்திற்கு வருவோம். இன்று இடம்பெற்றது வெற்றிகரமான பேச்சவார்த்தையாகும்” எனத் தெரிவித்தார்.

ரணில் போட்டியிடுவதாகக் கூறவில்லை.

தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தப் பேச்சுவார்த்தையின் போது எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் பீபீசி சிங்கள சேவைக்குத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...