தாமரை மொட்டு சின்னத்தை மாற்றப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தன தெரிவித்தார். பெசில்வாதியாக அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு கூறினார்.
“எந்தவிதமான காரணங்களுக்காகவும் தாமரை மொட்டு சின்னத்தை மாற்றுவதற்கு நாம் தயாரில்லை. தாமரை மொட்டு எனப்பவடுவது இந்நாட்டு மக்களால் வெற்றி பெறவைக்கும் ஒரு சின்னமாகும். எனவே எந்தவிதமான அழுத்தங்கள் வந்தாலும், எந்தவிதமான நிலைமைகள் ஏற்பட்டாலும் தாமரை மொட்டு சின்னத்தை மாற்றுவதற்கு நாம் இடமளிக்கப் போதில்லை” எனவும் அவர் இதன் போது கூறினார்.
அண்மையில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாரி ஜயசேகரம அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண ஆகிய இருண்டு கட்சிகளும் இணைவதாயின் கண்டிப்பாக பொது சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக தீர்மானதிதை ஏற்படுக் கொள்ள வேவண்டும். அவ்வாறில்லாவிட்டால் மாற்று வழிகளை எடுப்பதற்கு நேரிடும் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாரிசிரி ஜயசேகர சுட்டிக் காட்டினார்.
ஸ்ரீ.ல.சு.கட்சி இல்லாவிட்டாலும் நாம் வெற்றி பெறுவோம் - ஷெஹான்
இதனிடையே தாமரை மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க கருத்து தெரிவித்த போது, ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடும் சின்னம் தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என பெசிலுக்கு எதிரானவராகக் கருதப்படும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கூறியுள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக இதுவரையில் 8 சந்தர்ப்பங்களில் இரு கட்சி பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தற்போதைய பொருளாலரும் பாராளுமன்ற உறுப்பினருமான லசந்த அழகியவன்ன குறிப்பிடும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சிகளுக்கிடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் அதற்கு மாற்றீடாக ஸ்ரீ.ல.சு.கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ.ல.சு.கட்சியின் கோரிக்கை குப்பை கூடையில்! - கோட்டா தாமரை மொட்டு சின்னத்தில் மாத்திரமே!
T
The Leader Desk
செப்டம்பர் 13, 2019 • 5:29 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தாமரை மொட்டு சின்னத்தை மாற்றப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தன தெரிவித்தார்.
- அண்மையில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாரி ஜயசேகரம அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.
- நடைபெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக இதுவரையில் 8 சந்தர்ப்பங்களில் இரு கட்சி பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

