Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ஞானசார தேரர் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு நாகனந்தவின் நிபந்தனை!

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2019 • 4:55 PM

ஞானசார தேரர் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு நாகனந்தவின் நிபந்தனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தான் ஜனாதிபதி தேர்தலில் அபேட்சகராகப் போட்டியிடாமல் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நகானந்த கொடிதுவக்கு நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
  • இந்த கலந்துரையாடலுக்கு ஞானசார தேரர், நாகனந்த கொடிதுவக்கு மற்றும் ரொஹான் பல்லேவத்த போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்துள்ளது.
  • தான் முன்வைத்துள்ள அரசியலமைப்புத் திருத்த வரைபை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதாக ஞானசார தேரர் நாட்டின் முன் வாக்குறுதி வழங்க வேண்டும் என்பதே நகானந்த தொடிதுவக்குவின் நிபந்தனையாகும்.
எழுத்து அளவு:

தான் ஜனாதிபதி தேர்தலில் அபேட்சகராகப் போட்டியிடாமல் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நகானந்த கொடிதுவக்கு நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தான் முன்வைத்துள்ள  அரசியலமைப்புத் திருத்த வரைபை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதாக ஞானசார தேரர் நாட்டின் முன் வாக்குறுதி வழங்க வேண்டும் என்பதே நகானந்த தொடிதுவக்குவின் நிபந்தனையாகும்.

நேற்று திங்கட்கிழமை கொழும்பு OPA ல் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள சிலரை அழைத்து “விசந்தும” என்ற அமைப்பு நேற்று கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.  இந்த கலந்துரையாடலுக்கு ஞானசார தேரர், நாகனந்த கொடிதுவக்கு மற்றும் ரொஹான் பல்லேவத்த போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்துள்ளது.

ஞானசார தேரரை விடுவிப்பதற்கு

இந்தக் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதாரண, ஞானசார தேரருக்கு அநீதியான முறையில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த வேளையில் நாகனந்த கொடிதுவக்கு தேரருக்காக எந்தவித ஒத்துழைப்புக்களையும் வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்தினார்.

இதன் போது பதிலளித்த கொடிதுவக்கு, ஞானசார தேரர் குற்றமிழைத்திருந்த காரணத்தினால் ஞானசார தேரருக்கு உதவி செய்ய முன்வரவில்லை எனக் கூறினார்.  ஞானசார தேரர் உடனடியாக இதற்குப் பதலளித்ததோடு, அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

எவ்வாறாயினும் ஞானசார தேரர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாராயின் நிபந்தனைகளின் கீழ் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாகனந்த கொடிதுவக்கு இணக்கத்தைத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...