Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

“கொழும்பு சென்று ரணிலுக்கு கூறுவோம்” - சஜித் வருகிறார், அடுத்த கூட்டம் காலிமுகத்திடலில்!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2019 • 5:01 PM

“கொழும்பு சென்று ரணிலுக்கு கூறுவோம்” - சஜித் வருகிறார், அடுத்த கூட்டம் காலிமுகத்திடலில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய தேசிய கட்சியின் கிராமங்கள், நகரங்களின் பிரதிநிதிகளது குரலை நேற்றைய தினத்தில் நாடே பார்த்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது என அந்த அமைச்சர் மேலும் கூறினார்.
  • குரல் பதிவு - 1 அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி அபேட்சகராக அறிவிக்க வேண்டும் எனக் கோரும் கடிதத்தில் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 77 பாராளுமன்ற உறுப்பினர்களுள் 42 போர் இதுவரையில் கையொப்பமிட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
  • குரல் பதிவு - 2 “இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை மதிப்பதில்லை”- மஹிந்த கவலை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தோன்றியுள்ள குழப்ப நிலை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆழ்ந்த கவலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
எழுத்து அளவு:

தீர்மானித்துள்ளனர்.

“கொழும்புக்குச் சென்று ரணிலிடம் கூறுவோம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்படவுள்ள பிரமாண்டமான கூட்டம் இடம்பெறும் திகதி பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும் என இந்த கூட்ட ஏற்பாடுகளைச் செய்யும் அமைச்சர் ஒருவர் கூறினார்.

“சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோரும், செயற்குழு அங்கத்தவர்களுள் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோரும் விடுத்த கோரிக்கையினை பிரதமர் தொடர்ந்தும் கவனத்தில் எடுக்காமல் செயற்படுவாரானால், கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரை கொழும்புக்கு அழைத்து வந்து  அலரி மாளிகையினை முற்றுகையிட வேண்டிய நிலை எமக்கு ஏற்படும்” என்றும் அந்த அமைச்சர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கிராமங்கள், நகரங்களின் பிரதிநிதிகளது குரலை நேற்றைய தினத்தில் நாடே பார்த்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது என அந்த அமைச்சர் மேலும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சனியன்று கொழும்பில்...!

அவர் அவ்வாறு கூறியது ஐக்கிய தேசிய கட்சியினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறும் எனக் கூறியேயாகும்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என அமைச்சர்களான சாகல ரத்நாயக்கா, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன போன்றோர் நேற்று முன்தினம் முழுவதும் அந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தோன்றியிருக்கும் உள்ளக முரண்பாடு தொடர்பில் நெத் நிவ்ஸூக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க இவ்வாறு கூறினார்.

குரல் பதிவு - 1

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி அபேட்சகராக அறிவிக்க வேண்டும் எனக் கோரும் கடிதத்தில் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 77 பாராளுமன்ற உறுப்பினர்களுள் 42 போர் இதுவரையில் கையொப்பமிட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

குரல் பதிவு - 2

“இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை மதிப்பதில்லை”- மஹிந்த கவலை

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தோன்றியுள்ள குழப்ப நிலை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆழ்ந்த கவலைக்கு காரணமாக அமைந்துள்ளது.


“இன்று ஐக்கிய தேசிய கட்சித் தலைவரை பொருட்படுத்துவதில்லை. ஐக்கிய தேசிய கட்சி இரண்டு மூன்றாக உடைந்துள்ளது” என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான்  எந்த சந்தர்ப்பத்திலும் நீதிமன்றங்களுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்றும் எதிர்கட்சி தலைவர் அங்கு உரையாற்றும் போது கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“கொழும்பு சென்று ரணிலுக்கு கூறுவோம்” - சஜித் வருகிறார், அடுத்த கூட்டம் காலிமுகத்திடலில்! | Tamil Leader | We Lead the Nation