Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

“ஜனாதிபதி வேட்பாளர் ரணில்” செய்தி பொய்! முடிந்தால் வேட்பாளராக போட்டு காட்டுமாறு சவால்!

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2019 • 4:51 PM

“ஜனாதிபதி வேட்பாளர் ரணில்” செய்தி பொய்! முடிந்தால் வேட்பாளராக போட்டு காட்டுமாறு சவால்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சஜித் பிரேமதாசவையும் நிறுத்த வேண்டும் என இன்று (06) இடம்பெற்ற அக்கட்சியின் அனேக சிரேஷ்டமானவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றாக பொய்யானது என அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தனர்.
  • பிரதமரை களமிறக்கினால் எம்மால் கோத்தாவுடன் போட்டியிடுவதற்காக அருகிலும் செல்ல முடியாது என்றும், சஜித் வந்தால் கூடிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம அங்கு மேலும் கூறினார்” 20 வருடங்களுக்கு பின்னர் ஐ.தே.கட்சிக்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு!
  • கட்சியின் சிரேஷ்டமானவர்கள் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் பிரதமர் எந்த சந்தர்ப்பத்திலும், எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
  • அடுத்த ஞாயிறு (08) சஜித் பிரேமதாசவை தனிமையில் சந்தித்து இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதாக பிரதமர் தெளிவாகக் கூறினார்.
எழுத்து அளவு:

சஜித் பிரேமதாசவையும் நிறுத்த வேண்டும் என இன்று (06) இடம்பெற்ற அக்கட்சியின் அனேக சிரேஷ்டமானவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றாக பொய்யானது என அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிரேஷ்ட அமைச்சர் ஒருவர்  தெரிவித்தனர். “ரணில் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரதமர் வேட்பாளர்” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் theleader.lk குறித்த சிரேஷ்ட அமைச்சரிடம் கேட்ட போதே அவா் இவ்வாறு கூறினார்.

“உண்மையிலேயே அக்கூட்டத்தில் இடம்பெற்றது குறித்த செய்தியில் கூறப்பட்ட விடயத்திற்கு முற்றாக மாற்றமான சம்பவமாகும். தன்னை விட இரண்டு மடங்கு சஜித் பிரேமதாச பிரபலமானவர் என்பதை பிரதமரால் ஏற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது”  எனத் தெரிவித்த அந்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

“நாம் கட்சித் தலைவரிடத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனக் கூறுவது கோபத்தில் அல்ல என அமைச்சர் மலிக் சமரவிக்ரம இங்கு சுட்டிக் காட்டினார். பிரதமரை களமிறக்கினால் எம்மால் கோத்தாவுடன் போட்டியிடுவதற்காக அருகிலும் செல்ல முடியாது என்றும், சஜித் வந்தால் கூடிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம அங்கு மேலும் கூறினார்”

20 வருடங்களுக்கு பின்னர் ஐ.தே.கட்சிக்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு!

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டால் 20 வருடங்களாக எமது கட்சியால் பெற்றுக் கொள்ள முடியாது போயிருந்த ஜனாதிபதி பதவியை பெற்றுக் கொள்வதற்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகும் என இங்கு அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்த கருத்தை அங்கீகரித்த அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ரஞ்ஜித் மத்துமபண்டார போன்ற சிரேஷ்ட அமைச்சர்களும் கூட இங்கு கருத்து தெரிவித்தனர்.

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பிற்கு அமைய சஜித் பிரேமதாச தன்னை விட முன்னணியில் இருப்பதை பிரதமரால் ஏற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது.

கட்சியின் சிரேஷ்டமானவர்கள் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் பிரதமர் எந்த சந்தர்ப்பத்திலும், எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அடுத்த ஞாயிறு (08) சஜித் பிரேமதாசவை தனிமையில் சந்தித்து இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதாக பிரதமர் தெளிவாகக் கூறினார்.

இளைய உறுப்பினர் இருவர் குழப்பம்

எனினும் பிரதமரின் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டிருந்த சரத் பொன்சேகா மற்றும் தயா கமகே ஆகிய சிரேஷ்டத்தில் குறைந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் குழப்பமான நிலையினை தோற்றுவிப்பதற்கு முயன்று அவர்கள் இருவருக்கும் ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கான தகுதிகள் இருப்பதாகக் கூறுவதற்கு இந்த கூட்டத்தை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எவ்வாறாயினும், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் லசந்த குணவர்தன என்பவரால் இக்கூட்டம் நிறைவடைந்த உடனேயே “ரணில் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரதமர் வேட்பாளர்”  என்ற செய்தியை சஜித் எதிர்ப்பு  சில சமூக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.

பாராளுமன்றத்திலும், மற்றும் செயற்குழுவிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர்  ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தற்போது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். எனவே, முடிந்தால் ரணிலை போட்டு பாருங்கள் என நாம் “ரவி, தயா, பொனி” போன்றோருக்கு சவால் விடுகின்றோம்” என அந்த அமைச்சர் மேலும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...