Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

மக்கள் சஜித்தைத் தெரிவு செய்துவிட்டார்கள் - மங்கள சமரவீர யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு (காணொளி)

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2019 • 4:46 PM

மக்கள் சஜித்தைத் தெரிவு செய்துவிட்டார்கள் - மங்கள சமரவீர யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு (காணொளி)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாளை (07) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகும் “எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சிக்காக இன்று யாழ்ப்பாண்திற்கு வருகை தந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
  • இனி மீதமிருப்பது அதனை உத்தியோகபூர்வமான அறிவிப்பது மாத்திரமேயாகும்.
  • இதன் போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் சமரவீர, தற்போது பேசி இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எதுவும் இல்லை.
எழுத்து அளவு:

எல்லாம்  தெளிவாகுவதாகவும், அண்மையில் பதுளை மற்றும் மாத்தரையிலும், எதிர்கட்சித் தலைவர் பிரதிநிதித்துவம் செய்யும் குருணாகலில் நேற்று இடம்பெற்ற “சஜித் நாட்டுக்கே வருவார்” கூட்டங்களில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆர்வத்திலிருந்து இவ்விடயம் உறுதியாவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நாளை (07) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகும் “எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சிக்காக இன்று யாழ்ப்பாண்திற்கு வருகை தந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  கொழும்பிலிருந்து புகையிரதத்தில் வருகை தந்த அமைச்சர் சமரவீர, யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் பல ஊடகவியலாளர்கள் அவ்விடத்தில் கூடியிருந்ததோடு,  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடா்பில் பிரதமர் தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பிலும் கேள்வி எழுப்பினர்.


இதன் போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் சமரவீர, தற்போது பேசி இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எதுவும் இல்லை. நாட்டு மக்கள் சஜித்தைத் தெரிவு செய்துவிட்டார்கள். இனி மீதமிருப்பது அதனை உத்தியோகபூர்வமான அறிவிப்பது மாத்திரமேயாகும். பிரதமர் இதனை அடுத்த ஓரிரு தினங்களில் அறிவிப்பார். அது தொடர்பில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஒவ்வொருத்தரின் “ப்ளேன் நிவ்ஸ்” களுக்கு ஏமாந்து விட வேண்டாம்” என்றும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...