Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ரவியின் குற்றச்சாட்டு பொய்யானது. “எந்த எம்பிக்கும் மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை”

T

The Leader Desk

செப்டம்பர் 5, 2019 • 5:45 PM

ரவியின் குற்றச்சாட்டு பொய்யானது. “எந்த எம்பிக்கும் மதுபான  அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை”

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பில் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்றும் சபை முதல்வர் கூறினார்.
  • எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதன் போது குறிப்பிட்டார்.
  • கூட்டு எதிர்கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு பயந்து ஆளும் கட்சி மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.
எழுத்து அளவு:
தெரிவித்தார். மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பில் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்றும் சபை முதல்வர் கூறினார்.

கூட்டு எதிர்கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு பயந்து ஆளும் கட்சி மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.  மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கிரியெல்ல இவ்வாறு கூறினார்.

ரவி கருணாநாயக்கா கேட்ட கேள்வி!

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என அமைச்சர் ரவீ கருணாநாயக்கா கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியிடத்தில் கேட்டதைத் தொடர்ந்தே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளிவந்திருந்தது. மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படக் கூடாது என்ற ஜனாதிபதியின் உத்தரவு தற்போதும் அமுலில் உள்ளதா?  என்றும் அமைச்சர் இதன் போது ஜனாதிபதியிடம் தொடர்ந்தும கேள்வி எழுப்பினார்.

எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதன் போது குறிப்பிட்டார்.

விமல் வீரவங்சவின் இணையத்தளம் வெளியிட்ட செய்தி

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் இயக்கப்படும் ராஜபக்ஷ சார்பு இணையத்தளம் இச்செய்தியை பின்வருமாறு வெளியிட்டிருந்தது.

“ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்குச் சார்பான பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எத்தனோல் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சிக்கு சார்பான இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எதனோல் இலஞ்சம் வழங்கப்பட்டிருப்பது மென்மேலும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்துக் கொள்வதற்கேயாகும்”  என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சஜித் தரப்பினைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எத்தனோல் இறக்குமதி செய்யும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல முற்றாக மறுத்துள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...