Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

எனது படங்களை கிழிப்பதனால் எனது பயணத்தை உங்களால் நிறுத்த முடியாது! சஜித் பிரேமதாச

T

The Leader Desk

செப்டம்பர் 1, 2019 • 5:38 PM

 எனது படங்களை கிழிப்பதனால் எனது பயணத்தை உங்களால் நிறுத்த முடியாது! சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உங்களை நாடிவருகின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நாசகார செயல்களை செய்யும் கொலைகார கூட்டத்திற்கு சரியான பதிலடியை மக்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
  • மட்டக்களப்பு - மண்முனை, தாந்தாமலை, மாவடி முன்மாரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 269ஆவது, 270ஆவது வீடமைப்பு திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
  • மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் முதற்கட்டமாக இந்த மாத இறுதிக்குள் 2500 வீடுகளை கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம்.
  • எமது நிறுவனத்திற்குள் காணப்படுகின்ற மிகவும் திறமையான அதிகாரிகள் அதனை ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்பதாகவே 2500 வீடுகளை ஆரம்பித்து முடித்துவிட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எழுத்து அளவு:

உங்களை நாடிவருகின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நாசகார செயல்களை செய்யும் கொலைகார கூட்டத்திற்கு சரியான பதிலடியை மக்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு - மண்முனை, தாந்தாமலை, மாவடி முன்மாரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 269ஆவது, 270ஆவது வீடமைப்பு திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் முதற்கட்டமாக இந்த மாத இறுதிக்குள் 2500 வீடுகளை கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். எமது நிறுவனத்திற்குள் காணப்படுகின்ற மிகவும் திறமையான அதிகாரிகள் அதனை ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்பதாகவே 2500 வீடுகளை ஆரம்பித்து முடித்துவிட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

2025ஆம் ஆண்டிற்குள் 20000வீட்டுத் திட்டங்களை உருவாக்கி இந்நாட்டிலே வீடுகள் இல்லாது தவிக்கின்ற ஏழைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதியளிக்கின்றேன். இந்நாட்டிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற காட்டுமிராண்டித்தனங்கள், அத்துமீறல்கள் ஏழைகளின்பால் தொடுக்கப்பட்டிருக்கின்ற பிழையான செயற்பாடுகளை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பதாதைகளை கிழித்தெறிந்திருக்கின்றார்கள். என்னுடைய புகைப்படத்தைக்கூட கிழித்திருக்கின்றார்கள்.நாங்கள் வந்தால் தேசிய பாதுகாப்பைத் தருவோம் என்கின்றார்கள். நாட்டைப் பாதுபாப்பதாக கூறுபவர்கள் செய்கின்ற வேலைகள் உங்களுக்குப் புரிகின்றதா? இந்தப் பகுதிக்கு வந்து நேற்று நள்ளிரவில் இதனை செய்திருக்கின்றார்கள்.

Sajith Premadasa Batticalo

எனது முகத்தினை நீங்கள் கிழித்தெறியலாம். ஆனால் இந்தப் பகுதியிலுள்ள ஏழைமக்களின் பால் நான் கொண்ட மோகத்தையோ எனது செயற்பாடுகளையோ முடக்க முடியாது. என்னுடைய புகைப்படங்களை கிழிப்பதனால் எனது பயணத்தை உங்களால் நிறுத்த முடியாது. ஏழை எளிய மக்களுக்காக பணி செய்பவன் சஜித் பிரேமதாச என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த நாசகரமான செயலை செய்தவர்கள் இந்தப் பகுதியில்தான் இருக்கின்றார்கள். இவர்கள் கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு இடையூறாக கூலிப்படையாக செயற்பட்ட கொலைகாரக் கூட்டமாகும். இந்த கொலைகாரக்கூட்டம் அனைத்து பாகங்களிலும் காணப்படுகின்றனர்.

அவர்களால் நாசகரமான செயல்களை மாத்திரம் செய்யமுடியுமே தவிர நல்ல செயல்களை செய்ய முடியாது. எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உங்களுக்கான பலப்பரீட்சை,இந்த நாட்டை நடத்திச்செல்லக்கூடிய ஒருவரை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் உங்களை நாடிவருகின்றது. அதன் மூலம் நீங்கள் சரியான முடிவை எடுக்கும்பொழுது நாங்கள் சரியான முடிவை வழங்க இருக்கின்றோம். இப்படியான நாசகார செயல்களை செய்யும் கொலைகாரகூட்டத்திற்கு சரியான பதிலடியை தருவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...