Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

நிகாப், புர்கா தடை நீக்கம் தொடர்பாக முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா-

T

The Leader Desk

ஆகஸ்ட் 31, 2019 • 4:45 PM

நிகாப், புர்கா தடை நீக்கம் தொடர்பாக முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா-

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில் சில தனி நபர்கள் நிகாப், புர்கா தடை நீங்கி விட்டதென் பிரசாரம் செய்து வருகின்றர்.
  • நிகாப் அணியும் முஸ்லிம் பெண்கள் அவசர கால சட்டம் அமுலில் இருந்தபோது பொறுமையாகவும் நிதானமாகவும் எவ்வாறு கவனமாக நடந்து கொண்டார்களோ அவ்வாறு தொடர்ந்தும் நடந்து கொள்வது தற்போதுள்ள சூழலில் பாதுகாப்பானது என்றே முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா கருதுகிறது.
  • அவர்களது பிரசாரங்களுக்கமைவாக செயற்படுவதனை விடுத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகள், தகவல்களுக்கமைவாக மக்கள் செயற்படுவது அவசியம்.
எழுத்து அளவு:

அதன் கீழ் தடை செய்யப்பட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்குமா இல்லையா என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா வேண்டுகோள் விடுக்கிறது.

அவசர கால சட்ட விதிகளின் கீழ், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிய தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில்,முகத்தை மூடி ஆடை அணிய விதிக்கப்பட்ட தடையும் நீங்கியுள்ளதா இல்லையா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கின்றது.

இந்நிலையில் சில தனி நபர்கள் நிகாப், புர்கா தடை நீங்கி விட்டதென் பிரசாரம் செய்து வருகின்றர். அவர்களது பிரசாரங்களுக்கமைவாக செயற்படுவதனை விடுத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகள், தகவல்களுக்கமைவாக மக்கள் செயற்படுவது அவசியம்.

நிகாப் அணியும் முஸ்லிம் பெண்கள் அவசர கால சட்டம் அமுலில் இருந்தபோது பொறுமையாகவும் நிதானமாகவும் எவ்வாறு கவனமாக நடந்து கொண்டார்களோ அவ்வாறு தொடர்ந்தும் நடந்து கொள்வது தற்போதுள்ள சூழலில் பாதுகாப்பானது என்றே  முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா கருதுகிறது.

எனவே, இது விடயத்தில் நாட்டு சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு மிகவும் சாணக்கியமாக முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துமாறு முஸ்லிம் மார்க்க தலைமைகளிடம் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நிகாப், புர்கா தடை நீக்கம் தொடர்பாக முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா- | Tamil Leader | We Lead the Nation