உடனடியாக மாறுவதற்கு நடைமுறையிலுள்ள அரச இயந்திரமும் சட்டக் கட்டமைப்பும் இடமளிக்காத கட்டமைப்புசார் நெருக்கடி மீண்டும் அரங்கிற்கு வந்துள்ளது.
தேசிய மின்சாரக் கட்டமைப்பின் மொத்த மின் உற்பத்தியில் 46% வீதத்தை மாத்திரம் வழங்கும் தாபன மின் நிலையங்களுக்காக (Thermal Power Plants) மொத்தச் செலவில் 71% க்கும் அதிகமான தொகையாகச் செலவிடப்படுவதே இதற்குப் பிரதான காரணமாகும்.
குறிப்பாக, மொத்த மின் விநியோகத்தில் 14% வீதமாக மட்டுமே உள்ள டீசல் மின் நிலையங்களுக்காகச் செலவிடப்படும் தொகையானது மொத்த உற்பத்திச் செலவில் 40% நெருக்கமாகவுள்ளது. ஒரு கிலோவாட் மணித்தியாலத்திற்கு 94 ரூபா சராசரிச் செலவை ஏற்க நேரிடுவது சாதாரண நுகர்வோரின் மின்சாரக் கட்டணம் மற்றும் உள்நாட்டுத் தொழில்துறைகளின் போட்டித்தன்மை ஆகியவற்றின் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
திட்டமிடலும் களம் மட்டத்திலான தாமதங்களும்
தேசிய முறைமை இயக்குநரின் (National System Operator) 2027–2029 இடைக்காலத் திட்டத்திற்கு அமைவாகச் சூரிய சக்தியிலிருந்து 1,400 மெகாவாட்டையும், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems) மூலம் 1,000 மெகாவாட்டையும் இணைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்காக முதலீடு செய்யப்படவுள்ள தொகையானது சுமார் 400 பில்லியன் ரூபாவாகும்.
செலவு குறைந்த மாற்றீடுகளுக்கு உடனடியாக மாற வேண்டிய அவசியம் தெளிவாக விளங்கியபோதிலும், களம் மட்டத்திலுள்ள நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான பிரச்சினைகள் காரணமாக, 2022 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட சியம்பலாண்டுவ 100 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டத்தின் நிலங்களை வழங்குவதற்கு மாத்திரம் ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன. இதன் நிறைவு 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படுவதிலிருந்து நிர்வாகத் தாமதத்தின் தீவிரத்தன்மை வெளிப்படுகிறது. முல்லிகுளம் 50 மெகாவாட் திட்டங்கள் இரண்டும் நிலப் பிரச்சினைகள் மற்றும் சட்ட ஒப்பந்த வரைவுகளுக்கு மத்தியில் இப்போதும் சிக்கியுள்ளன.
முதலீட்டு வாய்ப்புகளும் நிறுவன ரீதியான மாற்றமும்
சூரிய மற்றும் காற்றுச் சக்தியில் நிலவும் நிலையற்ற தன்மையைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மின்கல சேமிப்புத் திட்டம் (Battery Storage) சிறந்ததொரு முன்னெடுப்பாகும். கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து, தாபன மின் நிலையங்களைச் சார்ந்திருப்பதைக்குக் குறைப்பதற்கு இத்தொழில்நுட்பம் கைகொடுக்கும் எனத் துறைசார் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் 17 க்கும் மேற்பட்ட அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதும், ரூபாவை அடிப்படையாகக் கொண்ட விலைச் சூத்திரங்களும் முதலீட்டு அபாயமும் பாரிய தடைகளாகத் தொடர்கின்றன. இலங்கை மின்சார சபையை (CEB) மறுசீரமைப்பது சட்ட ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அது வெற்றிபெற வேண்டுமானால் வணிகத் துறையின் அனுபவமும் தொழில்சார் நிபுத்துவமும் கொண்ட மேலாண்மை தோற்றுவிக்கப்பட வேண்டும்.
டெண்டர்களைப் பிரகடனப்படுத்துவதைத் தாண்டி, உண்மையாகவே தேசியக் கட்டமைப்பில் இணையக்கூடிய மின் அலகுகளின் அளவு மற்றும் நுகர்வோருக்குக் கிடைக்கக்கூடிய உண்மையான நிவாரணம் ஆகியவற்றின் மீதே மின்சக்தித் துறை சீர்திருத்தங்களின் வெற்றி தீர்மானிக்கப்படும்.


