Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல அமைச்சர் ஷாஜஹான் - அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் சந்திப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 18, 2026 • 11:05 AM

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல அமைச்சர் ஷாஜஹான் - அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் சந்திப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாநில அரசின் சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சரான ஏ.
  • பிராந்திய ஒத்துழைப்பின் ஊடாக மக்கள் மட்டத்திலான தொடர்புகளை வளர்த்துக் கொள்வது குறித்தும், இளைய தலைமுறையினரின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
  • Shahjahan) உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கும் விஜயம் செய்திருந்தனர்.
எழுத்து அளவு:

மாநில அரசின் சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சரான ஏ. எம். ஷாஜஹான் (A. M. Shahjahan) உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கும் விஜயம் செய்திருந்தனர்.

    இதன்போது, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்புப் பேச்சார்த்தையின் போது, இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களின் தற்போதைய சமூக நிலைமை, கல்வித் துறையின் முன்னேற்றம் மற்றும் நலன்புரித் திட்டங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. குறிப்பாக இரு நாட்டுச் சமூகங்களுக்கும் இடையே நிலவும் வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் நடைமுறைச் சாத்தியமான மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வது குறித்து இருதரப்பினதும் கவனம் செலுத்தப்பட்டது.

    பிராந்திய ஒத்துழைப்பின் ஊடாக மக்கள் மட்டத்திலான தொடர்புகளை வளர்த்துக் கொள்வது குறித்தும், இளைய தலைமுறையினரின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

    மூத்த பிரதிநிதிகள் குழு சந்திப்பில் பங்கேற்பு

    இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பர், கட்சியின் பொருளாளர் ரஹ்மத் மன்சூர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், வெளி விவகாரப் பணிப்பாளர் சிராஷ் மீராசாஹிப், அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி. சமால்தீன் உள்ளிட்ட கட்சியின் உயர் பீடப் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

    தமிழ்நாட்டு அமைச்சருடன் வருகை தந்த விசேட பிரதிநிதிகள் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இக்கலந்துரையாடல் மிகவும் நட்புறவானதும் சாதகமானதுமான சூழலில் நடைபெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

    எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

    சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

    Tamil Leader • எங்களைப் பற்றி

    Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

    மேலும் வாசிக்க (Read More)→

    கலந்துரையாடல் (0)

    உரையாடலில் இணையுங்கள்

    கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

    கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...