நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்கள் (MSMEs) வங்கி அமைப்பிடமிருந்து நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ள நேரிடும் பிரதான பிரச்சினையொன்றை மையப்படுத்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவிற்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாகக் கடனைச் செலுத்தத் தவறி, பின்னர் அந்தக் கடனை முழுமையாகச் செலுத்தி முடித்த நபர்களுக்குக் கூட, ஆண்டுகள் பல கடக்கும் வரை மீண்டும் கடனொன்றைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு நிலவும் நிர்வாகத் தடைகளை நீக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
CRIB பிரச்சினை ஏன் இவ்வளவு தீவிரமானது?
இலங்கை கடன் தகவல் பணியகம் (CRIB) எந்தவொரு நபரையும் அல்லது நிறுவனத்தையும் உத்தியோகபூர்வமாகக் கருப்புப் பட்டியலில் (Blacklist) சேர்ப்பதில்லை எனச் சட்ட ரீதியாகத் தெளிவுபடுத்தியுள்ள போதிலும், நடைமுறையில் வேறு காரியமே இடம்பெறுகின்றது.
-
தகவல்கள் தங்குதல்: கடனை முழுமையாகச் செலுத்தி முடித்த போதிலும், நிலுவையாக இருந்த அந்தப் பழைய தகவல்கள் அறிக்கையில் 5 ஆண்டுகள் வரை பதிவாகியிருக்கும்.
-
பழைய பதிவுகளுக்கு முன்னுரிமை: இந்நாட்டின் பெரும்பாலான வணிக வங்கிகள் புதிய கடனொன்றை அனுமதிக்கும் போது, விண்ணப்பதாரரின் தற்போதைய வருமானத்தைக் கருத்திற்கொள்ளாமல், கடந்த கால அறிக்கையிலுள்ள இந்தப் பதிவையே கருத்திற்கொள்கின்றன.
-
முதலீட்டுத் தடை: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்து மீண்டும் கட்டியெழுப்ப முனையும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு இதன் மூலம் மீண்டும் மூலதனத்தைக் கண்டறிவதற்கான வழி முற்றிலும் அடைக்கப்படுகின்றது.
மலேசியாவிலிருந்து பெறக்கூடிய முன்னுதாரணம்
சர்வதேச நிதி நடைமுறைகளை ஒப்பிட்டுச் சுட்டிக்காட்டும் பாராளுமன்ற உறுப்பினர், மலேசியாவின் மத்திய கடன் தகவல் அமைப்பான CCRIS போன்ற நாடுகளில் நடைமுறையிலிருப்பது இதனை விடவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதொரு நடைமுறையாகும் எனக் குறிப்பிடுகிறார்.
அங்கு கடனொன்று செலுத்தி முடிக்கப்பட்ட உடனே தரவுத் தொகுப்பு யாவற்றையும் புதுப்பிக்கப்படுகின்றது. வங்கிகள் முதன்மையாகக் கடந்த 12 மாத காலப்பகுதியில் குறித்த நபரின் மீளளிப்பு நடத்தையை மட்டுமே அவதானிக்கின்றன. பழைய நெருக்கடிகள் காரணமாகத் தொழில்முனைவோரை நிரந்தரமாக ஒதுக்கி வைக்கும் நடவடிக்கை அங்கு இடம்பெறுவதில்லை.
அயல்வரவுத் திட்டத்திற்கு முன்வைக்கப்பட்ட 5 பிரதான யோசனைகள்
வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக இந்நாட்டின் நிதித் துறைக்கு அறிமுகப்படுத்துமாறு நாமல் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ள ஐந்து பிரதான நடவடிக்கைகள் வருமாறு:
-
5 நாட்களில் புதுப்பித்தல்: கடன்தொகை முழுமையாகச் செலுத்தி முடிக்கப்பட்டதும் 5 வேலை நாட்களுக்குள் CRIB தரவுத் தொகுப்பைப் புதுப்பித்தல்.
-
தெளிவான வகைப்படுத்தல்: செலுத்தி முடிக்கப்பட்ட கடன்களை 'முழுமையாகச் செலுத்தி முடிக்கப்பட்டது/மூடடப்பட்டது' (Fully Settled/Closed) என அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடுதல்.
-
தற்போதைய திறனை மதிப்பிடல்: கடந்த காலத் தவறுகளை மட்டும் வைத்துத் தீர்மானிக்காமல், விண்ணப்பதாரரின் தற்போதைய வருமானம் மற்றும் மீளளிக்கும் திறனை (Repayment Capacity) கருத்திற்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கியின் ஊடாக வங்கிகளுக்கு வழிகாட்டல்களை வழங்குதல்.
-
கால எல்லையை மீளாய்வு செய்தல்: தகவல்களைத் தக்கவைத்துக்கொள்ளும் 5 ஆண்டு கால எல்லையைச் சர்வதேசத் தரத்திற்கு இணங்கக் குறைப்பது குறித்து அவதானம் செலுத்துதல்.
-
இரண்டாம் வாய்ப்புக் கடன் திட்டம்: கடன் சுமையிலிருந்து விடுபட்ட சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோருக்காக 'இரண்டாம் வாய்ப்பு வணிகக் கடன் திட்டம்' (Second Chance Business Loan Scheme) எனும் பெயரில் விசேட கடன் திட்டமொன்றைத் தொடங்குதல்.
பொருளாதாரப் பகுப்பாய்வாளர்களின் பார்வை
நிதிப் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதற்கு இணங்க, கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று மற்றும் கடுமையான பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியில் இந்நாட்டின் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் முடங்கின. இவ்வாறான பின்னணியில் அனைத்துப் பொறுப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவந்த தொழில்முனைவோர் ஒருவர் மீண்டும் சந்தைக்குள் நுழைவதற்கு இடமளிக்காமல் இருப்பது ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்படும் தடையாகும்.
எனவே, வங்கி அமைப்பின் ஆபத்து மேலாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், நியாயமான மறுசீரமைப்பொன்றை இந்நாட்டின் கடன் தகவல் அறிக்கையிடல் துறைக்குச் சேர்ப்பது காலோசிதமான நடவடிக்கையாகும் எனப் பொருளாதாரத் துறை வல்லுநர்களும் கருதுகின்றனர்.


