Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டது ஏன்? ரணில் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துகிறார்!

T

The Leader Desk

அக்டோபர் 11, 2026 • 5:01 AM

ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டது ஏன்? ரணில் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துகிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடம்பெற்ற சம்பவத்தை மையமாகக் கொண்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கான பின்னணி குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரிவான விளக்கமளித்துள்ளார்.
  • சங்க வினய, பராஜிகா மற்றும் அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரை தேரர் ஒரு வருட காலத்தைச் சிறையில் கழித்த பின்னர், மகா சங்கத்தினரின் பிரதிநிதிகள் குழுவொன்று வருகை தந்து அரசாங்கத்திற்கு விடயங்களை தெளிவுபடுத்தியது.
  • சிறையிலிருக்கும் போது காவி உடை களையப்பட்டிருந்தால், அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசாங்கத்தின் மீதே விழுந்திருக்கும்.
  • அது அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையின் கீழ் அமல்படுத்தப்பட்டது," என ரணில் விக்ரமசிங்க விவரித்தார்.
எழுத்து அளவு:

இடம்பெற்ற சம்பவத்தை மையமாகக் கொண்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கான பின்னணி குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரிவான விளக்கமளித்துள்ளார்.

கொழும்பு மலலசேகர மாவத்தையிலுள்ள (மால் பார) அரசியல் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இத்தீர்மானமானது வெறுமனே ஒரு தனிப்பட்ட மன்னிப்பு அல்லவென்றும், மாறாகச் சமயம் மற்றும் வினய பீடகம் (பௌத்த துறவிகளுக்கான ஒழுக்க விதிகள்) தொடர்பில் எழுந்த தீவிரமான பிரச்சினையொன்றிற்குத் தீர்வு காண்பதே என்றும் சுட்டிக்காட்டினார்.

ஹோமாகம சம்பவமும் எழுத்துப்பூர்வ வாக்குறுதியும்

ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்கவின் அறிவித்தலுக்கு அமைவாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அவர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட போது அவரது காவி உடை (சிவுரு) களையப்படவில்லை என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

"அன்று தேரரைச் சிறைக்கு அனுப்பும் போது காவி உடை அகற்றப்படவில்லை. இது குறித்து அன்றைய நீதி அமைச்சரான தலதா அதுகோரள, கொடபிட்டியே ராகுல தேரருக்கு அனுப்பிய கடிதம் இன்னமும் என்னிடம் உள்ளது. அக்கடிதத்தில் காவி உடை களையப்பட மாட்டாது என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது," என அவர் வெளிப்படுத்தினார்.

சங்க வினய, பராஜிகா மற்றும் அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரை

தேரர் ஒரு வருட காலத்தைச் சிறையில் கழித்த பின்னர், மகா சங்கத்தினரின் பிரதிநிதிகள் குழுவொன்று வருகை தந்து அரசாங்கத்திற்கு விடயங்களை தெளிவுபடுத்தியது. குற்றவியல் வழக்கன்றின் போதோ அல்லது வினய பீடகத்தின்படி 'பராஜிகா' (துறவி பதவியை இழக்கும் தீவிர ஒழுக்க மீறல்) நிலையை அடையும் போதோ மட்டுமே காவி உடையைக் களைவது இடம்பெறும் எனச் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

நீதிமன்றத்திற்கு இடையூறு விளைவிப்பது அல்லது அவமதிப்பது குற்றமாக இருந்தபோதிலும், அது வினய விதிகளின்படி 'பராஜிகா' செயலல்லவென்றும், சாதாரண நடைமுறையின்படி இவ்வாறான சந்தர்ப்பங்களில் தொடர்புடைய தரப்பினரின் காரக சபைகள் மூலம் அழைத்துக் கண்டிப்பது அல்லது தியானம் செய்வதற்கு அவகாசம் வழங்குவதே வழக்கமென்றும் தேரர்கள் தெரிவித்தனர்.

பராஜிகா அல்லாத ஒரு விடயத்திற்காகப் பலவந்தமாகக் காவி உடையைக் களைந்தால், அது அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள 'புத்த சாசனத்தைப் பாதுகாக்கும்' பொறுப்பிற்கு முரணான பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என அன்று சங்கத்தினர் நினைவூட்டியதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சரவைப் பேச்சுவார்த்தையும் மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானமும்

இது குறித்து அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தான் சங்கத்தினருக்கு அறிவித்ததாகவும், அதன்பின்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடையே இது குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.

"ஒரு வருடம் கடந்த பின்னர் தேரரின் காவி உடையைக் களைந்து சிறையில் வைப்பதா, அல்லது ஒரு வருட தண்டனையை அனுபவித்துள்ளதால் மன்னிப்பு வழங்கி விடுவிப்பதா எனத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. தொடர்ச்சியாக அவரை அந்த நிலையில் வைத்திருக்க முடியாது. சிறையிலிருக்கும் போது காவி உடை களையப்பட்டிருந்தால், அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசாங்கத்தின் மீதே விழுந்திருக்கும். ஜனாதிபதியின் தீர்மானம் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதால் மன்னிப்பு வழங்குவதாகும். அது அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையின் கீழ் அமல்படுத்தப்பட்டது," என ரணில் விக்ரமசிங்க விவரித்தார்.

காரணங்களை எழுத்துப்பூர்வமாக வழங்காமை மற்றும் உலக நடைமுறை

மன்னிப்பு வழங்கும் போது எழுத்துப்பூர்வமாகக் காரணங்களைக் குறிப்பிடவில்லையெனவும், வழக்கமாக சுதந்திர தினம் அல்லது வைகாசி விசாக தினம் போன்ற சந்தர்ப்பங்களில் கைதிகளை விடுவிக்கும் போதோ அல்லது தண்டனையைக் குறைக்கும் போதோ எழுத்துப்பூர்வ காரணங்கள் தெரிவிக்கப்படுவதில்லை என்றும் அவர் விளக்கினார்.

அன்றைய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைச்சாலை நெரிசல் காரணமாகக் கைதிகளை விடுவிக்க யோசனை முன்வைத்த சந்தர்ப்பத்திலும் தான் வாய்மொழியாகவே ஆலோசனைகளை வழங்கியதாகவும், எழுத்துப்பூர்வ குறிப்புகளைப் (minutes) பேணாமை இந்நாட்டிலும் ஏனைய பல நாடுகளிலும் சாதாரண நிர்வாக நடைமுறையேயாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

CPA இன் எதிர்ப்பு மற்றும் இந்திய உதாரணம்

இம் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) நீதிமன்றம் சென்றமை குறித்தும் விக்ரமசிங்க இங்கு கருத்து வெளியிட்டார்:

"இந்தியாவில் பிரதம நீதியரசரை 'தலித்' சாதியைக் குறிப்பிட்டுத் தாழ்வாகப் பேசிச் செருப்பால் அடித்த சந்தர்ப்பத்தில் கூட, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கண்டித்து அல்லது ஒரு மாதம் வரை சிறையில் வைத்து விடுவிப்பார்கள். இங்கு எந்தவொரு மதத்திற்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தேரர் ஒரு வருட தண்டனையை அனுபவித்தார். அதன் பின்னரே சமயம் மற்றும் வினய பீடகம் தொடர்பான பிரச்சினை உருவானது. இங்கு வெளிப்படுத்தப்பட்டது பௌத்த பெரும்பான்மையினரின் கருத்தாகும். அங்ஙனமிருக்க CPA அதற்கு எவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்க முடியும்? இவற்றிற்கு ஆதரவளிக்க முடியாது. வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றே மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தால் அது பிரச்சினையாகியிருக்கும்; ஆனால் இம்மன்னிப்பானது ஒரு வருடத்தின் பின்னர் உருவான சமயம் மற்றும் வினயப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே வழங்கப்பட்டது."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...