Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

கோட்டாபயின் முதலாவது பிரசாரக் கூட்டம் 09ம் திகதி அநுராதபுரத்தில் : மஹிந்தவுடன் விமலும்

T

The Leader Desk

செப்டம்பர் 28, 2019 • 3:44 PM

கோட்டாபயின் முதலாவது பிரசாரக் கூட்டம் 09ம் திகதி அநுராதபுரத்தில் : மஹிந்தவுடன் விமலும்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முதலாவது பிரசாரக் கூட்டம் அநுராதபுரம் சல்ஹாது விளையாட்டு மைதானத்தில் வரும் 09ம் திகதி மாலை 3.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
  • அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளும் இரண்டு பிரசாரக் கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடாத்துவதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தீர்மானித்துள்ளது.
  • அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேனவினால் ஏற்பாடு செய்யப்படவுள்ள இந்த பிரசாரக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ளவுள்ளாா்.
எழுத்து அளவு:

முதலாவது பிரசாரக் கூட்டம் அநுராதபுரம் சல்ஹாது விளையாட்டு மைதானத்தில் வரும் 09ம் திகதி மாலை 3.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேனவினால் ஏற்பாடு செய்யப்படவுள்ள இந்த பிரசாரக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ளவுள்ளாா். கூட்டு எதிர்கட்சி உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவிற்கு ஆதரவுவழங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளும் இரண்டு பிரசாரக் கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடாத்துவதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தீர்மானித்துள்ளது. இதற்குப் புறம்பாக தொகுதி மட்டத்திலும் பல்வேறு பிரசாரக் கூட்டங்களை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வரும் முதலாம் திகதியிலிருந்து மூன்று சந்தர்ப்பங்களில் வீடு வீடாகச் சென்று மக்களைத் தெளிவு படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...