Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

வீட்டுமுறை சூரிய மின்சக்திக்கு ஒரு புதிய பாதை: நுகர்வோருக்கு ஏற்படவுள்ள நிலைமை!

T

The Leader Desk

அக்டோபர் 7, 2026 • 4:38 AM

வீட்டுமுறை சூரிய மின்சக்திக்கு ஒரு புதிய பாதை: நுகர்வோருக்கு ஏற்படவுள்ள நிலைமை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயணத்தில் ஒரு தீர்மானமிக்க திருப்புமுனையை அடையாளப்படுத்தும் புதிய திருத்தங்கள், சாதாரண நுகர்வோர் முதல் பெரு அளவிலான முதலீட்டாளர்கள் வரை அனைத்துத் தரப்பினரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.
  • புதிய 'நெட் பிளஸ்' (Net Plus) திருத்தத்தின் கீழ் இடம்பெறுவது இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நடைமுறையாகும்: வீட்டில் உற்பத்தியாகும் ஒவ்வொரு சூரிய மின்சார அலேகையும் இலங்கை மின்சார சபைக்கு ஏறத்தாழ 23 ரூபாய் என்ற நிலையான குறைந்தபட்ச விலையிலேயே விற்க வேண்டி ஏற்படும்.
  • எனினும், அந்த வீடு இரவு நேரத்தில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, சாதாரண வீட்டு மின்சாரக் கட்டணத்தின் கீழ் அதிக அலகுகளுக்கு 42 ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலுத்த வேண்டி வரும்.
  • அதிகாரிகளின் தொழில்நுட்ப வாதம் இத் தீர்மானமானது வெறும் நிதி சார்ந்த முடிவு மாத்திரம் அல்ல என்பது மின்சார சபை பொறியியலாளர்களின் கருத்தாகும்.
எழுத்து அளவு:

பயணத்தில் ஒரு தீர்மானமிக்க திருப்புமுனையை அடையாளப்படுத்தும் புதிய திருத்தங்கள், சாதாரண நுகர்வோர் முதல் பெரு அளவிலான முதலீட்டாளர்கள் வரை அனைத்துத் தரப்பினரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.

பல ஆண்டுகளாக நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் தங்களது மாதாந்த மின்சாரக் கட்டணத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு இருந்த பிரதானமான வழி, கூரைகளில் பொருத்தப்படும் சூரிய மின்தகடு (Solar Panel) அமைப்பாகும். எனினும், புதிய விதிமுறைகள் மூலம் அந்தச் சமன்பாடு முற்றாக மாறியுள்ளதாகப் பொருளாதார மற்றும் சக்தித் துறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் என்ன?

பழைய நடைமுறையின் கீழ், ஒரு வீட்டில் உற்பத்தியாகும் மின்சார அலகுகளின் அளவு, அந்த வீட்டின் பகல் மற்றும் இரவு நேர ஒட்டுமொத்தப் பயன்பாட்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும் (Offset) வாய்ப்பு இருந்தது.

இதன் காரணமாக, ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் சூரிய மின்தகடுகளுக்காகச் செய்யப்பட்ட ஆரம்பச் செலவைச் சாதாரண குடும்பங்களால் ஈடுசெய்து கொள்ள முடிந்தது.

புதிய 'நெட் பிளஸ்' (Net Plus) திருத்தத்தின் கீழ் இடம்பெறுவது இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நடைமுறையாகும்:

  • வீட்டில் உற்பத்தியாகும் ஒவ்வொரு சூரிய மின்சார அலேகையும் இலங்கை மின்சார சபைக்கு ஏறத்தாழ 23 ரூபாய் என்ற நிலையான குறைந்தபட்ச விலையிலேயே விற்க வேண்டி ஏற்படும்.

  • எனினும், அந்த வீடு இரவு நேரத்தில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, சாதாரண வீட்டு மின்சாரக் கட்டணத்தின் கீழ் அதிக அலகுகளுக்கு 42 ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலுத்த வேண்டி வரும்.

இந்த வில வித்தியாசத்தின் காரணமாக, இலட்சக்கணக்கான ரூபாயைக் கடனாகப் பெற்றோ அல்லது சேமிப்புகள் மூலமாகவோ சூரிய மின் அமைப்புகளைப் பொருத்தும் ஒரு சாதாரண குடும்பத்திற்கு அந்தச் செலவை ஈடுசெய்வதற்கு 10 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் எடுக்கும் என இத்துறை சார்ந்த வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிகாரிகளின் தொழில்நுட்ப வாதம்

இத் தீர்மானமானது வெறும் நிதி சார்ந்த முடிவு மாத்திரம் அல்ல என்பது மின்சார சபை பொறியியலாளர்களின் கருத்தாகும். பகல் நேரத்தில் தேசிய மின் கட்டமைப்பில் (National Grid) கட்டுப்பாடின்றி இணையக்கூடிய அதிகப்படியான சூரிய மின்சாரத் கொள்ளளவை நிர்வகிப்பது, தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளது.

மேலும், சூரிய மின்தகடுகளைப் பொருத்திக் கொள்வதற்கான வசதியற்ற ஏழு மில்லியனுக்கும் அதிகமான சாதாரண நுகர்வோர் நாட்டில் வாழ்கின்றனர். தேசிய மின் விநியோகக் கட்டமைப்பைப் பராமரிப்பதற்கான சுமையை அம்மக்கள் மீது மாத்திரம் சுமத்துவது நியாயமற்றது என்றும், சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்பவர்களும் விநியோகக் கட்டமைப்பின் செலவுக்கு நியாயமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அதிகாரத்தரப்பு வாதாடுகிறது.

மின்கலச் சேமிப்பு அமைப்புகளும் (Battery Systems) ஏகபோக அபாயமும்

பகல் நேரத்தில் உற்பத்தியாகும் மேலதிக சூரிய மின்சாரத்தை இரவு நேரப் பயன்பாட்டிற்காகச் சேமித்து வைப்பதற்கு மின்கலச் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) அவசியமான காரணியாகும்.

இருப்பினும், இந்த மின்கலச் சேமிப்பு அலகுகளை நிறுவுவதற்கான டெண்டர் கொள்முதல் நடைமுறையின் போது, பெருமளவிலான அலகுகள் இத்துறையிலுள்ள முன்னணிச் சில நிறுவனங்களுக்கு மாத்திரம் உரித்தானமை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையின் மூலம் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையானது சில சிறிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் (Oligopoly) முடங்கும் அபாயம் உள்ளதாகப் புலனாய்வு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சூரிய மின்சக்தி ஜனநாயகத்திற்குப் பதிலாக, இலாபமானது சில நிறுவனங்களிடம் மாத்திரம் குவிவதைத் தடுப்பதற்கு வெளிப்படைத்தன்மையான ஒரு வேலைத்திட்டம் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் பசுமைச் சக்தி மாற்றம் வெற்றியடைவதாயின், தேசிய மின் கட்டமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை, நாட்டின் சாதாரண பிரஜைகளும் தாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு நியாயமான சக்திவளக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...