Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ஆட்சித் தலைமைப் பொறுப்பில் மோடியின் 25 ஆண்டுகள்: 'கர்மயோகி'யின் சேவைப் பயணம்!

T

The Leader Desk

அக்டோபர் 7, 2026 • 4:20 AM

ஆட்சித் தலைமைப் பொறுப்பில் மோடியின் 25 ஆண்டுகள்: 'கர்மயோகி'யின் சேவைப் பயணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • (முதல்வர் முதல் பிரதமர் வரை) மக்கள் பணியாற்றி, வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை, பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார்.
  • தன்னலமற்ற சேவைக்கு உதாரணங்கள்: ​1979ல் மோர்பி அணை உடைந்தபோது, களத்தில் இறங்கி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
  • ​1990ல் டில்லியில் இருந்து ஆமதாபாத் சென்ற ரயிலில், இருக்கை கிடைக்காமல் தவித்த இரு பெண் ரயில்வே அதிகாரிகளுக்காக, மோடியும், சங்கர்சிங் வகேலாவும் தங்களின் முதல் வகுப்பு படுக்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, தரையில் துணியை விரித்துப் படுத்து தூங்கினர்.
  • வெளிச்சம் படாத நேரத்திலும் அடுத்தவர் துயர் துடைக்கும் இத்தகைய குணமே ஒரு உண்மையான தலைவரை அடையாளம் காட்டுகிறது.
எழுத்து அளவு:

(முதல்வர் முதல் பிரதமர் வரை) மக்கள் பணியாற்றி, வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை, பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார்.

அவரது சேவை மற்றும் தலைமைப் பண்புகள் குறித்து பாராட்டி, ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் தலைவர் கமலேஷ் படேல் கூறியதாவது: பிரதமர் மோடி வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல. ஆன்மிகப் பக்குவமும், தீர்க்கமான தலைமைத்துவமும் ஒருங்கே அமையப் பெற்றவர்.

17 வயதிலேயே வீட்டைத் துறந்து இமயமலை பயணம் மேற்கொண்டவர். சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சேவையையே தனது வாழ்நாள் இலக்காக மாற்றிக் கொண்டவர். தொண்டர், அமைப்பாளர், குஜராத் முதல்வர், தற்போது நாட்டின் பிரதமர் எனப் பொறுப்புகள் மாறினாலும், அவரிடம் உள்ள சேவை மனப்பான்மை துளியும் மாறவில்லை.

தன்னலமற்ற சேவைக்கு உதாரணங்கள்:

​1979ல் மோர்பி அணை உடைந்தபோது, களத்தில் இறங்கி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் தாக்கமே, சமீபத்தில் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை அவரால் ஆழமாக உணர வைத்தது.

​1990ல் டில்லியில் இருந்து ஆமதாபாத் சென்ற ரயிலில், இருக்கை கிடைக்காமல் தவித்த இரு பெண் ரயில்வே அதிகாரிகளுக்காக, மோடியும், சங்கர்சிங் வகேலாவும் தங்களின் முதல் வகுப்பு படுக்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, தரையில் துணியை விரித்துப் படுத்து தூங்கினர். வெளிச்சம் படாத நேரத்திலும் அடுத்தவர் துயர் துடைக்கும் இத்தகைய குணமே ஒரு உண்மையான தலைவரை அடையாளம் காட்டுகிறது.

2001ல் கடுமையான நிலநடுக்கத்தால் குஜராத் நிலைகுலைந்திருந்த நேரத்தில், தேர்தல் அரசியலே அறியாத 51 வயது மோடியிடம் முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டது. எத்தனையோ சந்தேகங்கள், விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அச்சம் என்பது என்னவென்றே அறியாமல் களப்பணியாற்றி வெற்றிகரமான நிர்வாகியாக மாறினார்.

அதேபோல், 2014ல் பிரதமராகப் பொறுப்பேற்றபோதும், உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு, தேசப் பாதுகாப்பு என மிகப்பெரிய பொறுப்புகள் அவர் முன் நின்றன. தொடர்ந்து வந்த கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் போர், மேற்கு ஆசியப் பதற்றங்கள் என உலகமே தத்தளித்த காலகட்டங்களில் கூட, 140 கோடி மக்களின் நம்பிக்கையைச் சுமந்து நாட்டைத் திறம்பட வழிநடத்தினார்.

உண்மையான 'கர்மயோகி':

மனதில் எந்தவித பயமோ, சுயலாபமோ இன்றி, உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் பணியாற்றுவதே மோடியின் வெற்றி ரகசியம். பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரது இந்த 25 ஆண்டு சேவைப் பயணம் ஒரு மிகச்சிறந்த பாடமாகும். தேசத்தை மேலும் பல புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்ல பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் இறைவன் அருள வேண்டும். இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...