வினைத்திறன் குறைந்த அரச நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்திருப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர்

செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் குறிப்பிட்ட முக்கியமான சில விடயங்கள்.

  • இம்மாதம் சர்வதேச நாணய நிதியத்தினுடைய உடன்படிக்கை ஒப்புதல் ஆகி 21 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
  • 330 மில்லியன் டொலர் இலங்கைக்கு முதல் கொடுப்பனவாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அரசாங்கம் தொடர்ந்தும் வர்த்தக முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.
  • வினைத்திறன் அற்ற பல அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இதன்படி இதுவரைக்கும் 40 அரசு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • அவற்றை நிதி அமைச்சின் கீழ் பொறுப்பேற்று மூடுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
  • தற்போது இந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்ற அரச பணியாளர்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி