நேற்றையதினம் (03) முதல் அமுலுக்கு வரும் வகையில், கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் பராட்டா, ரொட்டி மற்றும் ரோல்ஸ் ஆகியவற்றின் விலைகள் 10 முதல் 15 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 100 ரூபாவிற்கும் 200 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றம் தேவையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கைக்கும் இடையே ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி மற்றும் கடன் நிவாரணம் ஆகியவற்றில் தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குவதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி