நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் மனித நடமாட்டமில்லாத காடுகளுக்குள் தனியாக நடந்து சென்று பழங்குடிகளிடம் தபால்களை கொண்டு சேர்த்த சிவன், கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரது சேவையை பாராட்டி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டரில் பதிவு வெளியிட, சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வெலிகட கைதிகள் கொலை வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவா, இன்று காலை ஒரு புகைப்படக்காரர் ஊடகவியலாளரை அச்சுறுத்தி இழுத்துச் சென்றுள்ளார்.

பலாங்கொடை, ராவணா கந்த பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றினால் மரணித்த இலங்கை உழைப்பாளர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளதோடு, இதுவரை அங்கு மரணித்த இலங்கை உழைப்பாளிகளின் எண்ணிக்கை 35 வரை அதிகரித்துள்ளதாக இலங்கை வேலை வாய்ப்புப் பணியகம் கூறுகிறது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் நிற வர்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வெலிக்கட சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏராளமான கைதிகள் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமையால், சிறைச்சாலைக்குள் தொற்றுநோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் குரான் மத்ரஸாக்களை மூடுவதற்கும் புர்காவை தடை செய்வதற்கும் முஸ்லிம்களால் நடத்தப்படும் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறும் பௌத்த பிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பிற குழுக்கள் நாட்டை திசை திருப்ப முயற்சிக்கின்றனர், விவாதிக்கப்பட வேண்டிய பிற தலைப்புகள் முன்வைக்கப்படுகின்றது என தேசபக்தி தேசிய இயக்கத்தின் செயலாளர் வைத்தியர் வசந்த பண்டார கூறினார்.

வெலிக்கட  சிறைச்சாலையில் உள்ள சிறைக் கைதிக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இதனால் விரைவில் சிறைச்சாலைக்கு அருகில் இருக்கும்  அரசாங்க அச்சக ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு  சிறைச்சாலையின் முன்னாள் ஆணையாளருக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகள் குறித்து சிஐடியினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி