கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றினால் மரணித்த இலங்கை உழைப்பாளர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளதோடு, இதுவரை அங்கு மரணித்த இலங்கை உழைப்பாளிகளின் எண்ணிக்கை 35 வரை அதிகரித்துள்ளதாக இலங்கை வேலை வாய்ப்புப் பணியகம் கூறுகிறது.

ஜூன் 19ம் திகதி ஆகும்போது மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய 23 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். ஐக்கிய அமீர் ராஜ்ஜியம், சவூதி அரேபியா, குவைத், கட்டார், ஓமான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இந்த மரணங்கள் நடந்துள்ளதாகத் தெரிய வருவதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பாளர் மங்கள ரந்தெனிய கூறினார். மரணித்த 35 பேரில் இருவர் பெண்கள்.   ஏனையவர்கள் ஆண்களாகும். இவர்களது இறுதிச் சடங்குகள் அந்தந்த நாடுகளிலேயே நடந்துள்ளன.

கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய நிலையில் அங்கு பணியாற்றும் இலங்கையர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கொரோனா மரணங்களைத் தவிர மன அழுத்தம் காரணமாகவும் சிலர் தற்கொலை செய்து கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், அவர்கள் இங்கு வரவழைப்பதற்கோ, அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ தூதுவராலய மட்டத்தில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி