செய்திகள்
Showing page 1135 of 1199 (17,984 articles)

முன்னாள் பிரதமர் அவன்கார்ட் நிறுவனத் தலைவரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்றதாக சம்பிக்க தெரிவிப்பு!
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்னாள் பிரதமர், அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் இருந்து பணம் பெற்றமை தொடர்பிலான தகவலை நல்லாட்சி அரசாங்கத்தின் பலமிக்க முன்னாள் அமைச்சர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற கட்டாயபடுத்தப்பட்ட பேராசிரியருக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் குரல் எழுப்புகின்றனர்!
இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக, பல்கலைக்கழக அதிகாரிகளால் ஒரு தசாப்த கால கற்பித்தல் நடவடிக்கைகளை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள, யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் தலைவருக்கு சார்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கிற்கு நீர் விநியோகிக்கப்படவில்லை!
இலங்கையின் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகங்களுக்கு மாத்திரமே குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கறுப்பு ஜுலை நினைவுகூறல்!
37 வருடங்களுக்கு முன்னர் 3,000ற்கும் மேற்பட்ட தமிழர்கள் அரச அனுசரணையுடன் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலை நினைவாக இணையவழி கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா!
இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 07 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

சனச வங்கிக்கு நட்டத்தை ஏற்படுத்தி வேட்டையாடப்படும் தொழிற்சங்கத் தலைவர்கள்!
சனச அபிவிருத்தி வங்கியின் நிர்வாகம் வங்கியை வேண்டுமென்றே நட்டமடையச் செய்வதாகவும், அதை எதிர்க்கும் தொழிற்சங்கத் தலைவர்களை பதவி நீக்கம் செய்யும் இழிவான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், நாட்டின் பிரதான வங்கிச் ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

வைத்திய நிபுணர் ஜாசிங்க சாதாரண தர கணிதப் பரீட்சை எழுத வேண்டுமாம்!
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்ட அரசாங்கம் மேற்கோள் காட்டிய புள்ளிவிபரங்களை கேலி செய்துள்ள பேராசிரியர் ஒருவர், சுகாதார சேவைகள் பணிப்பாளரை மீண்டும் க.பொ.த சாதாரண தர கணிதப் பாட பரீட்சைக்கு தோற்ற வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளார்.

காட்டு யானை தாக்கியதில் இருவர் பலி!
அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் காட்டுயானை யானை தாக்குதலுக்கு உள்ளான ஏழு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருணாவை கைது செய்யும் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது!
கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை உடனடியாகக் கைது செய்து, சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கடுவளை நகர சபை உறுப்பினர் போசெத் கலெஹிபத்திரன தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

பரீட்சை தொடர்பான முடிவுகளை ஏற்க முடியாது! ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
கல்வி அமைச்சால் வெளிடப்படவுள்ள பரீட்சை ஒத்திவைப்பது தொடர்பான முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரே அதிகளவில் ஊழல் செய்கின்றனர்!
பொதுச் சேவைத் துறையில் காவல்துறை மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனமான பதிவாகியுள்ள அதே வேலை அதற்கு அடுத்தபடியாக ஊழல்வாதிகளாக நாடாளுமன்றம் உள்ளிட்ட அரச மற்றும் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் பதிவாகியுள்ளனர்.

ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தொல்பொருள் இடங்களின் தலைவிதி குறித்து பௌத்தர்களுக்கு சந்தேகம்!
ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருக்கும் ராஜபக்ஷ சகோதரர்கள் தலைமையிலான அரசாங்கம் பௌத்த பாரம்பரியங்களை பாதுகாக்கும் என மக்கள் வைத்த நம்பிக்கை சிதைந்துவிட்டதாக, சிங்கள பௌத்த அமைப்பு ஒன்று கவலை தெரிவித்துள்ளது.

ஒரு நாளில் 4 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம், 2 மணித்தியாலத்திற்கு ஒரு குழந்தை துஷ்பிரயோகம்
இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாகவும் இலங்கையின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குண்டர் வன்முறை தொடர்பில் ஜனாதிபதியின் கட்சிக்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள் பதிவு!
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இடம்பெற்ற அதிகளவான வன்முறைச் சம்பவங்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான கட்சி மீது அதிகளவு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முழு இலங்கையிலும் பரவக்கூடிய ஆபத்து இல்லையென்பதால் ஊரடங்குச் சட்டம் அவசியமில்லை! அனில் ஜாசிங்க
கொரோனா தொற்றிய ஒரு சிலர் அடையாளம் காணப்பட்டதன் பின்பு ராஜாங்கன பிரதே யாய 1,3. மற்றும் 5 ஆகிய வலயங்களில் வசிக்கும் 12,000 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

