Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

முன்னாள் பிரதமர் அவன்கார்ட் நிறுவனத் தலைவரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்றதாக சம்பிக்க தெரிவிப்பு!

T

The Leader Desk

ஜூலை 26, 2020 • 3:14 AM

முன்னாள் பிரதமர் அவன்கார்ட் நிறுவனத் தலைவரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்றதாக சம்பிக்க தெரிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீனங்களுக்காக ரணில் விக்ரமசிங்க பணத்தைப் பெற்றதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
  • ஜனாதிபதி தேர்தலில்.எங்களின் அமைப்பாளர்களுக்கு செலுத்துவதற்கு பணம் இருக்கவில்லை.அதன்படி நான் அவன்கார்ட் நபரை அறிமுகப்படுத்தினேன்.அவர் கொடுத்த அவர் கொடுத்த சுமார் 5 இலட்சம் ரூபா பிரித்து வழங்கப்பட்டது.
  • ”எமது எந்தவொரு தொடர்பும் இன்றி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழும் இந்தக் குழுவினரைக் கைதுசெய்யப்படுவார்கள் என இது தொடர்பில் விசாரணை செய்வதற்கு வந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பண்டார கூறியிருந்தார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீனங்களுக்காக ரணில் விக்ரமசிங்க பணத்தைப் பெற்றதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

”தேர்தலுக்கு செலவு செய்ய பணம் இல்லை என எனது தலைவர் என்னிடம் கூறினார். ஜனாதிபதி தேர்தலில்.எங்களின் அமைப்பாளர்களுக்கு செலுத்துவதற்கு பணம் இருக்கவில்லை.அதன்படி நான் அவன்கார்ட் நபரை அறிமுகப்படுத்தினேன்.அவர் கொடுத்த அவர் கொடுத்த சுமார் 5 இலட்சம் ரூபா பிரித்து வழங்கப்பட்டது. நானும் தெரியாதது போல் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை எடுத்து வந்தேன் என கூறினார்.120 பேருக்கு அதனை கொடுத்ததாக கூறினார்.”

தாம் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த வஜிர அபேவர்தன இந்த தகவலைத் தெரிவித்தார் என காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மாத்திரம் அல்லாது கடந்த பொதுத் தேர்தல் காலப் பகுதியிலும் ரணில் விக்ரமசிங்க, நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் இருந்து பணத்தைப் பெற்றதாக முன்னாள் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனம் ஊடாக மிகத் தெளிவாக சட்டவிரோத ஆயுதச் செயற்பாடு இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சர், அந்தக் குழுவினரை கைதுசெய்யுமாறு சட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவன்கார்ட் நிறுவனத்தின் பணத்திற்கு அடிமையாகி, 62 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை ஐக்கிய தேசிய கட்சி காட்டிக்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

”எமது எந்தவொரு தொடர்பும் இன்றி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழும் இந்தக் குழுவினரைக் கைதுசெய்யப்படுவார்கள் என இது தொடர்பில் விசாரணை செய்வதற்கு வந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பண்டார கூறியிருந்தார். இந்தக் குழுவினர் கைதுசெய்யப்படுவார்கள் என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சுஹத கம்லத் எங்கள் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினார். வாரங்கள், மாதங்கள் கடந்துவிட்டனர். அவர்கள் கைதுசெய்யப்படவில்லை.அதற்கான காரணம் தற்போது எமக்கு விளங்கிவிட்டது.”

முன்னாள் அமைச்சர் மற்றும் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு இடையில் இருந்த தொடர்புகளை ஏற்படுத்தி, திருடர்கள் மூலம் அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சி குறித்து முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன முழுமையாக பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அவன்கார்ட் கடற்சேவை நிறுவனத்தின் தலைவர் யாப்பா ஹெட்டி பத்திரன்னாஹலாஹே யாப்பா சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக 7573 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னெடுக்கப்படும் வழக்கு கொழும்பு உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டுவருகின்றது.

எனினும் அரசியல் பழிவாங்கலுக்காக கடந்த அரசாங்கத்தின் காலப் பகுதியில் தமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்கள் என தெரிவித்து, நிஸ்ஸங்க சேனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முன்னாள் பிரதமர் அவன்கார்ட் நிறுவனத் தலைவரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்றதாக சம்பிக்க தெரிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation