Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஒரு நாளில் 4 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம், 2 மணித்தியாலத்திற்கு ஒரு குழந்தை துஷ்பிரயோகம்

T

The Leader Desk

ஜூலை 17, 2020 • 4:26 PM

ஒரு நாளில் 4 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம், 2 மணித்தியாலத்திற்கு ஒரு குழந்தை துஷ்பிரயோகம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டிற்கான குற்றச் சம்பவங்கள் தொடர்பிலான புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி, குற்றம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
  • கடந்த வருடத்தில் மாத்திரம் 5,292 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • மேலும், கடந்த வருடத்தில் இலங்கையில் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய 1,642 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • பொலிஸ் பிரிவுகளில் 44 பிரதேச பணியக பிரிவுகள் காணப்படுவதோடு, அவைகள் தொடர்ந்தும் செயற்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

2019ஆம் ஆண்டிற்கான குற்றச் சம்பவங்கள் தொடர்பிலான புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி, குற்றம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 5,292 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வருடத்தில் இலங்கையில் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய 1,642 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த தகவல்கள் அமைந்திருப்பதாகவும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்படாத ஒரு போக்கு நாட்டில் காணப்படுவதாகவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ள இலங்கை பொலிஸ் திணைக்களம், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவை நிறுவியுள்ளதாகவும், குற்றங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

44 பொலிஸ் பிரிவுகளில் 44 பிரதேச பணியக பிரிவுகள் காணப்படுவதோடு, அவைகள் தொடர்ந்தும் செயற்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துஷ்பிரயோகம் தொடர்பில் மாத்திரமன்றி, துஷ்பிரயோக சம்பவங்களுக்கு இணையான சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்ய முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரதும் கடமை எனவும்  பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம்

கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 8,500 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்ததாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு ஜூன் 12ஆம் திகதிவரை? சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 3,500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...