Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கிற்கு நீர் விநியோகிக்கப்படவில்லை!

T

The Leader Desk

ஜூலை 26, 2020 • 3:05 AM

வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கிற்கு நீர் விநியோகிக்கப்படவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறட்சியால் 60,455 குடும்பங்களைச் சேர்ந்த 202,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஜூலை 22 வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (115,559 பேர்) வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, 13,964 பேர் நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.
  • ,335 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 64,761 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • யாழ்ப்பாணம் மாவட்டம் வட மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 17,185 குடும்பங்களைச் சேர்ந்த 57,771 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறட்சியால் 60,455 குடும்பங்களைச் சேர்ந்த 202,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஜூலை 22 வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (115,559 பேர்) வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, 13,964 பேர் நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.

இருப்பினும், முழு வட மாகாணத்திலிருந்தும் வெலியோயா மற்றும் புத்துக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்கு மாத்திரமே குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கூற்றுப்படி, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

20,335 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 64,761 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம் வட மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 17,185 குடும்பங்களைச் சேர்ந்த 57,771 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் 9,382 குடும்பங்களைச் சேர்ந்த 34,805 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,841 குடும்பங்களைச் சேர்ந்த 12,922 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2,939 குடும்பங்களைச் சேர்ந்த 9,758 பேரும், வவுனியா மாவட்டத்தில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 303 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் 6,687 குடும்பங்களைச் சேர்ந்த 22,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய, வறட்சி அறிக்கையின்படி, வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் 4,343 குடும்பங்களைச் சேர்ந்த 13,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமேற்கு மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் 646 பேரும், தென் மாகாணத்தில், ஹம்பாந்தோட்டை, மாவட்டத்தில் 163 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா தவிர மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...