Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சனச வங்கிக்கு நட்டத்தை ஏற்படுத்தி வேட்டையாடப்படும் தொழிற்சங்கத் தலைவர்கள்!

T

The Leader Desk

ஜூலை 23, 2020 • 5:00 PM

சனச வங்கிக்கு நட்டத்தை ஏற்படுத்தி வேட்டையாடப்படும் தொழிற்சங்கத் தலைவர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சனச அபிவிருத்தி வங்கி நிர்வாகம் அதன் முதன்மை கூட்டுறவு நோக்கங்களுக்கு முற்றிலும் புறம்பான வகையில், மிகப் பெரிய வணிக சமூகத்திற்கு உதவும் நோக்கத்துடன் பல சட்டவிரோத பரிவர்த்தனைகள், ஊழல் மற்றும் மோசடிகளை மேற்கொள்வதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
  • ஊழியர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அமைய பல வருடங்களாக கொடுப்பனவுகளை வழங்குவதை வங்கி நிர்வாகம் தவிர்த்து வருவதாகவும், இலங்ககை வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அமில சுனிமலை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி, இலங்கை ஊழியர் சங்கம் நேற்றைய தினம் (ஜூலை 22) கிருலபனையில் அமைந்துள்ள சனச அபிவிருத்தி வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
எழுத்து அளவு:

சனச அபிவிருத்தி வங்கி நிர்வாகம் அதன் முதன்மை கூட்டுறவு நோக்கங்களுக்கு முற்றிலும் புறம்பான வகையில், மிகப் பெரிய வணிக சமூகத்திற்கு உதவும் நோக்கத்துடன் பல சட்டவிரோத பரிவர்த்தனைகள், ஊழல் மற்றும் மோசடிகளை மேற்கொள்வதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அமைய

பல வருடங்களாக கொடுப்பனவுகளை வழங்குவதை வங்கி நிர்வாகம் தவிர்த்து வருவதாகவும், இலங்ககை வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க கையெழுத்திட்ட ஊடக அறிக்கையில், சனச வங்கியின் குறித்த செயல்முறையை இலங்கை ஊழியர் சங்கம் மாத்திரமே நேரடியாக எதிர்ப்பதால், வங்கியின் நிர்வாகம், சனச வங்கிக் கிளையில் பணியாற்றும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின், தொழிற்சங்கத் தலைவரை, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக, தண்டிக்கும் நோக்குடன் பதவி நீக்கும் இழிவான முயற்சியை மேற்கொள்கின்றார்கள்.

"குறித்த தொழிற்சங்கத் தலைவர்களில் கிளைத் தலைவர், சிரேஷ்ட உப தலைவர் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் உள்ளனர்."

சம்மாந்துறை கிளையில் பணியாற்றும் தொழிற் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் அமில சுனிமல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதால் 173 நாட்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய தலைவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமில சுனிமலை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி, இலங்கை  ஊழியர் சங்கம் நேற்றைய தினம் (ஜூலை 22) கிருலபனையில் அமைந்துள்ள சனச அபிவிருத்தி வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...