Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

குண்டர் வன்முறை தொடர்பில் ஜனாதிபதியின் கட்சிக்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள் பதிவு!

T

The Leader Desk

ஜூலை 17, 2020 • 4:18 PM

குண்டர் வன்முறை தொடர்பில் ஜனாதிபதியின் கட்சிக்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள் பதிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதுவரை இடம்பெற்ற வன்முறைகளில் அரைவாசி சம்பவங்களுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்புபட்டுள்ளமை, தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி தெரியவந்துள்ளது.
  • நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மார்ச் மாதம் 2 ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பித்த ஜுலை 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 392 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
  • இவற்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக 191 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், இரண்டாவதாக அதிகபட்சமாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 81 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக 13 முறைப்பாடுகளும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிராக 11 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

இதுவரை இடம்பெற்ற வன்முறைகளில் அரைவாசி சம்பவங்களுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்புபட்டுள்ளமை, தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி தெரியவந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை அதற்கு அடுத்தபடியாக அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலேயே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மார்ச் மாதம் 2 ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பித்த ஜுலை 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 392 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக 191 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், இரண்டாவதாக அதிகபட்சமாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 81 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மூன்றாவது அதிகபட்ச முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக 13 முறைப்பாடுகளும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிராக 11 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கூறியுள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கீழ் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார்.

160, பூர்வாராம வீதி, கிருலப்பனை, கொழும்பு - 05,

தொலைபேசி இலக்கங்கள் - 011 2826384, 011 2826388

தொலைநகல் 011 2826146

மின்னஞ்சல் - cmev@cpalanka.org

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புபட்டதாக அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்ளும் வன்முறைகள் தொடர்பில் 1996 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு 24 மணித்தியாலங்களும் முறைப்பாடுகளை வழங்க முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்வதற்கு மேலதிகமாக இலக்கம் 14, ஆர்.ஏ.டி மெல் மாவத்தை, கொழும்பு - 04 இல் புதிததாக நிறுவப்பட்ட தேர்தல் முறைப்பாட்டை பெறும் பிரிவிலும் முறைப்பாடுகளை செய்ய முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் 0112 2505574 என்ற தொலைநகர் இலக்கம் ஊடாகவும் அல்லது iihrcsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தேர்தல் தொடர்பான முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளருக்கு எழுத்துபூர்வமாக முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...