Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வைத்திய நிபுணர் ஜாசிங்க சாதாரண தர கணிதப் பரீட்சை எழுத வேண்டுமாம்!

T

The Leader Desk

ஜூலை 22, 2020 • 3:10 AM

வைத்திய நிபுணர் ஜாசிங்க சாதாரண தர கணிதப் பரீட்சை எழுத வேண்டுமாம்! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையின் கொரோனா கட்டுப்பாட்டு வெற்றியைக் காண்பிப்பதற்காக 130,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
  • ”130,000 என்பது மக்கள் தொகையில் 0.6% அல்லது ஒரு மில்லியனுக்கு 5,900 ஆகும்.
  • எங்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.7% அல்லது ஒரு மில்லியனுக்கு 138,000 ஆகும்.
  • இந்தியா ஒரு மில்லியனுக்கு 0.9 சதவீதம் அல்லது 9,400 ஆக நமக்கு முன்னால் உள்ளது.
எழுத்து அளவு:

இலங்கையின் கொரோனா கட்டுப்பாட்டு வெற்றியைக் காண்பிப்பதற்காக 130,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் முன்னாள் பேராசிரியரான சிசிர பின்னவல இந்த தகவலை சமூக ஊடகங்களில் கேலி செய்ததோடு, சுகாதார சேவைகள் பணிப்பாளரை ”மீண்டும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற வேண்டுமென” பரிந்துரைத்துள்ளார்.

”130,000 என்பது மக்கள் தொகையில் 0.6% அல்லது ஒரு மில்லியனுக்கு 5,900 ஆகும். எங்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.7% அல்லது ஒரு மில்லியனுக்கு 138,000 ஆகும். இந்தியா ஒரு மில்லியனுக்கு 0.9 சதவீதம் அல்லது 9,400 ஆக நமக்கு முன்னால் உள்ளது. இந்நிலையில் நாம் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நினைப்பாராயின், அவர் மீண்டும் க.பொ.த சாதாரண தர கணிதப் பாடப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும்” என பேராசிரியர் பின்னவல ட்வீட் செய்துள்ளார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் முன்னாள் பேராசிரியரான சிசிர பின்னவல, தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கை பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்ட ஆய்வறிக்கையை, சமர்ப்பித்தவர்களில் ஒருவராவார்.

”கொரோனா தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பார்வை” என்ற இந்த ஆய்வை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான இலட்சுமன் கதிர்காமர் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி கணேசன் விக்னராஜா ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ச ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஆய்வறிக்கையின் நகலை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வைத்திய நிபுணர் ஜாசிங்க சாதாரண தர கணிதப் பரீட்சை எழுத வேண்டுமாம்! | Tamil Leader | We Lead the Nation