Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பொலிஸாரே அதிகளவில் ஊழல் செய்கின்றனர்!

T

The Leader Desk

ஜூலை 18, 2020 • 4:17 AM

பொலிஸாரே அதிகளவில் ஊழல் செய்கின்றனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுச் சேவைத் துறையில் ஏறத்தாழ அரைவாசி ஊழல் செயற்பாடுகளுக்கு காவல்துறையே பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கையிலுள்ள நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • மிகவும் பரவலாக, மிகவும் முறைப்பாடு செய்யப்பட்ட மற்றும் அழிவுகரமான ஊழல் மோசடிகள் காவல்துறையினர் மற்றும் அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காவல்துறையினரே அதிகளவில் ஊழலில் ஈடுபடுவதாக 50 வீதமானவர்கள் கூறியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் ஊழலில் ஈடுபடுவதாக வெரி்ட்ரே நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

பொதுச் சேவைத் துறையில் ஏறத்தாழ அரைவாசி ஊழல் செயற்பாடுகளுக்கு காவல்துறையே பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கையிலுள்ள நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பொதுத் துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவல்துறை, உள்ளுராட்சி அரசு மற்றும் கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிகாரமும் பொறுப்பும் காணப்படுவதே அதற்கு காரணமாக அமைந்துள்ளதாக வெரிட்ரே ரிசேர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

மிகவும் பரவலாக, மிகவும் முறைப்பாடு செய்யப்பட்ட மற்றும் அழிவுகரமான ஊழல் மோசடிகள் காவல்துறையினர் மற்றும் அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

corruption by Lanka

காவல்துறையினரே அதிகளவில் ஊழலில் ஈடுபடுவதாக 50 வீதமானவர்கள் கூறியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் ஊழலில் ஈடுபடுவதாக வெரி்ட்ரே நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஊழல் செய்வதில் பொதுமக்களை தூண்டுவதில் உள்ளுராட்சி அரசாங்கம் முன்னணில் உள்ளதுடன், இரண்டாம் இடத்தில் தேசிய அரசாங்கத்திலுள்ள அதிகாரிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் பங்குபற்றியவர்களில் 18 வீதமானவர்களின் கருத்துக்களின் படி இலங்கையின் நீதித்துறையும் சட்டத்துறையும் ஊழல்மிக்கவையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

safds

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...