செய்திகள்
Showing page 1125 of 1199 (17,984 articles)

இலங்கை உழைப்பாளிகள் வெளிநாடுகளில் பெருந்தொற்றிற்கு இரையாகும் நிலையில் இலங்கை உழைப்பாளிகளை மீண்டும் சௌதி அரேபியாவிற்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்நாட்டிற்கு வர வேண்டுமெனக் கேட்ட வெளிநாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான இலங்கை உழைப்பாளிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சௌதி அரேபியாவிற்கு உழைப்பாளிகளை மீண்டும் அனுப்பத் தொடங்கியுள்ளது.

நாட்டில் கொரோனா மரணங்கள் 107 அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டில் 100 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மரணம்!
இலங்கையில் நேற்று (28) கொரோனாவினால் 8 பேர் இறந்துள்ளனர் . கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 107க அதிகரித்துள்ளது.

அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளது பிரதமரை சுற்றியுள்ளவர்கள் பொய்சொல்கின்றனர்! பசில்
அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளது நான் கூட அங்கு சென்று பணியாற்ற முடியாது என பசில் ராஜபக்ச சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவின் தலைநகர் டீக்ரேவை ராணுவம் பிடித்துவிட்டதாக பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு!
எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக பிரதமர் அபிய் அகமது அறிவித்துள்ளார்

பயங்கரவாத சந்தேகநபர்கள் குறித்து பொலிஸ் மாஅதிபரிடம் கேள்வி!
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியங்களாக முன்வைக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள், வலுக்கட்டாயமாக பெறப்பட்டமைக் குறித்து பொலிஸ் மாஅதிபரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பில் பொது சேவை ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு!
கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், போதனா வைத்தியசாலைகளில் நிலவும் 89 விசேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பில், அரசுக்கு நெருக்கமான வைத்திய சங்கம், பொது சேவை ஆணைக்குழு மீது குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை!
அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமைத் தொடர்பில் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்று கவலை வெளியிட்டுள்ளது.

ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்!
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக கூறப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சிறைச்சாலை திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எம் இனத்தின் குரல்வளைகள் இறுக நெரிக்கப்படுகின்றன! பா.உ. ஶ்ரீதரன்
மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும், அதன் பண்பாடு தழுவிய விழுமியங்களோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித நாள் என பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் நிகழ்த்திய உரையில்

உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இலோன் மஸ்க் 2ஆம் இடம்!
உலகின் மிகப் பெரிய செல்வந்தர் பட்டியலில் பில் கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி தொழில்நுட்பத் தொழில்முனைவர் இலோன் மஸ்க் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த வருட இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் பொலிஸார் அதிகமாக சிக்கியுள்ளனர்!
இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொலிஸ் உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.

சிறைச்சாலையில் புதிய PHI அதிகாரிகளாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள்!
சிறைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியுள்ள நிலையில், தொற்றுநோய் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள கைதிகள், சிறைகளில் சுகாதாரப் பாதுகாப்பை

பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புற்று நோய் தீவிரம் அடைந்ததால் நடிகர் தவசி மரணம்!
முரட்டு மீசை, கம்பீர தோற்றத்துடன் நகைச்சுவை கலந்து திரையில் தோன்றி ரசிகர்களை சிரிக்கச் செய்த நடிகர் தவசி, புற்று நோய்க்கு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை இரு 8.15 மணியளவில் உயிரிழந்தார். இந்த தகவலை அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சரவணன் உறுதிப்படுத்தினார்.

எம்.டி.வி மற்றும் சிரச அலைவரிசைகளுக்கு எதிராக தடை உத்தரவு!
எம்.டி.வி நிறுவனத்திற்கு சொந்தமான சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்தின் மூலம் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவத்திற்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும்

