செய்திகள்
Showing page 1123 of 1199 (17,984 articles)

இணையத்தள ஊடகவியலாளர் கைது!
இணையத்தள ஊடகவியலாளரான முருகப்பிள்ளை கோகிலதாசன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர் 14 நாட்களுக்கு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது! ஜே.வி.பி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் இந்த அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என கோரி ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ஹட்டன் நகரில் இன்று (06) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

மகர தாய்மார்களின் புலம்பல் 32 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை நினைவூட்டுகிறது! மங்கள
'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற வாசகம் அப்படியே சொற்களோடு மட்டும் நின்றுவிடாது, நாட்டை நேசிக்கும் உண்மையான ஒரு தேசபக்தன் அதை எவ்வாறு யதார்த்தமாக்குவது என்று உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை மோதல் குறித்த உண்மையை மறைக்க காணொளியை பகிரும் அரசு!
11 பேர் கொல்லப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலை மோதல் குறித்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட காணொளியின் நம்பகத்தன்மைத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வீதியமைப்பிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு எதிர்ப்பு!
அரசாங்க அபிவிருத்தி திட்டங்களின்போது, முக்கியமான சுற்றுச்சூழல் விடயங்களை கருத்திற்கொள்ளப்படாமையை வலியுறுத்தி பொலன்னறுவையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மாதுருஓயா, வஸ்கமு

சுகாதார அமைச்சர் ஒழிந்திருக்காது சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்! சஜித் பிரேமதாச
சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரிதகதியில் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களை தடுத்து நிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

நாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி!
கொரோனா தொற்றுநோயை ஒழிக்க நேரடியாக பங்களிக்கும் "1990 சுவசெரிய" அம்பியுலன்ஸ் சேவையின் குறைபாடுகளையும் தகவல்களையும் மறைக்க தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கு அதன் நிர்வாக

எதிர்வரும் 14 ஆம் திகதி வரை கண்டி, அக்குரணை பாடசாலைகள் சில தற்காலிகமாக மூடப்பட்டன!
கண்டி மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 45 பாடசாலைகளுக்கும் அக்குரணையில் 05 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நப்பாசை இன்னமும் எமக்கு இருக்கின்றது! காரைதீவு தவிசாளர்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தித் தரத் தவறுகின்ற பட்சத்தில் அதைப் பெறுவதற்கான போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

புலிகள் நாட்டை பிளவுபடுத்தி தனிநாடு கோரினர் ஜே.வி.பி நாட்டை பிளவுபடுத்துவதற்கான போராட்டத்தை செய்யவில்லை! பொன்சேகா
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, 40,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா புதிய விளக்கத்தை அளித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் அரசு மற்றும் தலிபான்களுக்குஇடையிலான அமைதி பேச்சில் முதல் கட்ட உடன்படிக்கையில் முன்னேற்றம்!
ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே இடம்பெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் முதல்கட்ட உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதாக இரு தரப்பும் கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளன.

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கள்!
மஹர சிறைச்சாலையில் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலை அடுத்து,கைதிகள் நடத்திய போராட்டங்களை அடக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 பேரின் உடல்களை எரியூட்டுவதற்கான ஏற்பாட்டிற்கு, எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரண்டு நாட்களுக்குள் விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மனநோய்க்கான மருந்துகளினால் வன்முறை ஏற்படாது! மனநோய் வைத்தியர்கள் சங்கம்
மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளினால் வன்முறை நடத்தைகள் ஏற்பட மாட்டாது என இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தலில் போட்டியிட ஏதுவாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தமது அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் 1990களில் இருந்து காத்திருந்திருக்கிறார்கள்.

புரவி சூறாவளியால் 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிப்பு!
புரவி சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

