Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளது பிரதமரை சுற்றியுள்ளவர்கள் பொய்சொல்கின்றனர்! பசில்

T

The Leader Desk

நவம்பர் 29, 2020 • 5:48 AM

அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளது பிரதமரை சுற்றியுள்ளவர்கள் பொய்சொல்கின்றனர்! பசில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அலரிமாளிகை முடக்கப்படவில்லை என பிரதமரின் ஊடக செயலாளார் தெரிவித்துள்ளமை குறித்தும் அவர்கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார்.
  • அது நடந்திருக்க கூடாது அவர்களிற்கு அதற்கான அனுமதியில்லை எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
  • பிரதமரின் ஊடக செயலாளர் சொன்னதும் முற்றிலும் பொய் என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச அலரிமாளிகை முற்றாக முடக்கப்பட்டுள்ளது,என்னால் அங்குள்ள அலுவலகங்களை பயன்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அலரிமாளிகை முடக்கப்படவில்லை என பிரதமரின் ஊடக செயலாளார் தெரிவித்துள்ளமை குறித்தும் அவர்கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார்.
பிரதமரின் ஊடக செயலாளர் சொன்னதும் முற்றிலும் பொய் என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச அலரிமாளிகை முற்றாக முடக்கப்பட்டுள்ளது,என்னால் அங்குள்ள அலுவலகங்களை பயன்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளது,பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்,என பசில் ராஜபக்ச தெரிவித்தார் என சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பிரதமரின் ஊடக செயலாளருக்கு தான் என்ன செய்கின்றேன் என்பது தெரியாது உண்மைக்கு மாறான விடயங்களை தெரிவிப்பதன் மூலம் பிரதமரின் பெயருக்கு களங்கத்தையும் அவருக்கு தர்மசங்கடமான நிலையையும் ஏற்படுத்துகின்றனர் அவர்கள் ஏற்படுத்துகின்றனர் என பசில் ராஜபக்ச சீற்றம் வெளியிட்டுள்ளார்.

என்னை பற்றி அவர்கள் தெரிவித்ததும் பிழையான விடயங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது நடந்திருக்க கூடாது அவர்களிற்கு அதற்கான அனுமதியில்லை எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் எதனையும் மறைக்கவிரும்புபவரில்லை அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையானவர் முகத்துக்கு நேரே பேசுபவர் என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் வெளிப்படையானவர்களாக மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்காதவர்களாகயிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையை மறைப்பதால் என்ன பயன்? பிரதமர் மகிந்த ராஜபக்ச கூட முடக்கலின் பின்னர் அலரிமாளிகைக்கு செல்லவில்லை என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...