Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை!

T

The Leader Desk

நவம்பர் 27, 2020 • 3:37 AM

இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ”அன்னையர் முன்னணி” அமைப்பில் இணைந்து செயற்படும், மரணச் சான்றிதழ்களை தம்வசம் வைத்திருக்கும் பெரும்பாலான காணாமற்போனவர்களின் குடும்பங்கள் தொடர்பிலேயே பிரதமர் அவதானம் செலுத்தத் தவறியுள்ளதாக காணமற்போனோரின் குடும்ப ஒன்றியம் தெரிவித்துள்ளது.
  • பிரதமர் மஹிந்த ராஜபக்ச 1989 இல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது தலைமையில் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்பே ”அன்னையர் முன்னணி” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 6,000 ரூபாயை வழங்குவதற்காக, முன்னைய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காணாமல் போனதாக சான்றிதழ் பெற்றவர்களுக்கு 2019 செப்டம்பர் 18 அன்று பணம் செலுத்த அமைச்சரவை இணக்கம் தெரிவித்ததாக மனித உரிமை ஆர்வலர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

காணாமல் போனவர்களுக்காக முன்னைய அரசாங்கம் 500 மில்லியன் ரூபாயை ஒதுக்கியிருந்தாலும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என, நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

”அன்னையர் முன்னணி” அமைப்பில் இணைந்து செயற்படும், மரணச் சான்றிதழ்களை தம்வசம் வைத்திருக்கும் பெரும்பாலான காணாமற்போனவர்களின் குடும்பங்கள் தொடர்பிலேயே பிரதமர் அவதானம் செலுத்தத் தவறியுள்ளதாக காணமற்போனோரின் குடும்ப ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச 1989 இல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது தலைமையில் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்பே ”அன்னையர் முன்னணி” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருக்கும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அரசியல் கட்சிகளுக்கும், இந்த அமைப்பின் தலைவர் சிரேஷ்ட மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோவின் கையெழுத்துடன் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 6,000 ரூபாயை வழங்குவதற்காக, முன்னைய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக சான்றிதழ் பெற்றவர்களுக்கு 2019 செப்டம்பர் 18 அன்று பணம் செலுத்த அமைச்சரவை இணக்கம் தெரிவித்ததாக மனித உரிமை ஆர்வலர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 டிசம்பர் 31 வரை 153 குடும்பங்களுக்கு கொடுப்பனவு (11 மில்லியன் ரூபாய்) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரிட்டோ பெர்னாண்டோ, ”கண்ணால் காணமுடியாதவர்கள் குறித்த சான்றிதழை வைத்திருக்கும்” ஒரு சிலருக்கு பணம் வழங்கப்பட்டதோடு, மரணச் சான்றிதழை வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு 2010ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க தற்காலிக பதிவுச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில், இறப்புக்கான காரணம் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்பங்களுக்கும் மாதாந்தம் 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,200 உறுப்பினர்கள் பாதயாத்திரையாக வந்து இந்த ஆண்டு காதலர் தினத்தன்று (பெப்ரவரி 14) இந்த மாதாந்த கொடுப்பனவுக்கான கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்தனர்.

அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் நீதி அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டதால், நீதி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிவனங்களுடன் கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்பு ஊடாக தொடர்பு ஏற்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை பதிலும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 14ஆம் திகதி, மகஜர் ஒப்படைக்கப்பட்டபோது பிரதமரின் விசேட பிரதிநிதியாக முன்னிலையான, அமைச்சர் காமினி லொகுகே, காணாமல் போனவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இயலுமான அனைத்தையும் செய்யும் என தெரிவித்ததாக, பிரிட்டோ பெர்னாண்டோ பிரதமருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

1989 கலவரத்தின் போது காணாமல் போனவர்கள் விடயத்தில் பங்களிப்பு செய்தவர் என, மஹிந்த ராஜபக்சவை மேற்கோள் காட்டியுள்ள, மனித உரிமை ஆர்வலர், இந்த நேரத்தில் நிதி அமைச்சராக காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையானது, 89 காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ச முன்னின்ற விடயத்தை பின்னடையச் செய்வதாக அமைந்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

"நீங்கள் தெற்கில், ஒரு காலகட்டத்தில் காணாமல் போன குடும்பங்களுக்கு ஏதாவது செய்யும் வாய்ப்பை இழந்துவிட வேண்டாம் என இறுதியாக நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்."

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சிங்கள அல்லது தமிழ் வம்சாவளியா என்பதை பொருட்படுத்தாமல் காணாமல் போனவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமரிடம் பிரிட்டோ பெர்னாண்டோ அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை! | Tamil Leader | We Lead the Nation