Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்!

T

The Leader Desk

நவம்பர் 27, 2020 • 3:07 AM

ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரின் உயிர் பாதுகாப்பு குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனியவுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
  • இந்த முறைப்பாடு தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தவும், உங்கள் காவலில் உள்ள நபரின் உயிரைப் பாதுகாக்க வலுவான 0773732019 நடவடிக்கை எடுக்கவும் உங்களை வலியுறுத்துவதற்காகவே நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகிறோம்.
  • நவம்பர் 30ஆம் திகதி முன்னர் ஷானி அபேசேகரவின் உயிரைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனியவிடம், ரமணி முத்தெட்டுவேகம கோரிக்கை விடுத்துள்ளார்.
எழுத்து அளவு:

மஹர சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷானி அபேசேகர கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்து மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் (25) சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரின் உயிர் பாதுகாப்பு குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனியவுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

"தற்போது மஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபேசேகேர, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியானதை அடுத்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது” என மனித உரிமைகள் ஆணையாளர் ரமணி முத்தெட்டுவேகம தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

”ஷானி அபேசேகரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என அஞ்சுகின்றோம். இந்த முறைப்பாடு தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தவும், உங்கள் காவலில் உள்ள நபரின் உயிரைப் பாதுகாக்க வலுவான
0773732019
நடவடிக்கை எடுக்கவும் உங்களை வலியுறுத்துவதற்காகவே நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகிறோம். அபேசேகேர வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரை உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

நவம்பர் 30ஆம் திகதி முன்னர் ஷானி அபேசேகரவின் உயிரைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனியவிடம், ரமணி முத்தெட்டுவேகம கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...