Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

விசேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பில் பொது சேவை ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு!

T

The Leader Desk

நவம்பர் 28, 2020 • 11:32 AM

விசேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பில் பொது சேவை ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கண்காணிப்பு கொள்கைகளுக்கு முரணாக இடமாற்றங்களை தாமதப்படுத்தும் தேவையற்ற தலையீடுகளை பொது சேவை ஆணைக்குழு மேற்கொண்டதால் இந்த துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
  • வெற்றிடங்களை தனித்தனியாக நிரப்பாமல் 89 வெற்றிடங்களுக்கும் ஒரே பட்டியல் ஊடாக நிரப்புவதாக பொது சேவை ஆணைக்குழு அறிவித்தமையால் வெற்றிடங்களை நிரப்ப முடியவில்லை.
  • இடமாற்றக் கொள்கையில் குறிப்பிடப்படாத, இடமாற்றக் குழுவில் உள்ளடங்காத, ஒரு குழுவை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கண்காணிப்பு கொள்கைகளுக்கு முரணாக இடமாற்றங்களை தாமதப்படுத்தும் தேவையற்ற தலையீடுகளை பொது சேவை ஆணைக்குழு மேற்கொண்டதால் இந்த துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பொது சேவை ஆணைக்குழு மேற்கொண்ட பின்வரும் மூன்று நடவடிக்கைகள் காணமாக, விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளதாக, சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ கையெழுத்துடன், நவம்பர் 24ஆம் திகதி செவ்வாயன்று வெளியான ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. வெற்றிடங்களை தனித்தனியாக நிரப்பாமல் 89 வெற்றிடங்களுக்கும் ஒரே பட்டியல் ஊடாக நிரப்புவதாக பொது சேவை ஆணைக்குழு அறிவித்தமையால் வெற்றிடங்களை நிரப்ப முடியவில்லை.
  2. பல பதவிகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை மற்றும் வெற்றிடங்களுக்கான பட்டியலில் ஒப்புதல் பெறக்கூடிய பதவிகளுக்கு கூட ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
  3. இடமாற்றக் கொள்கையில் குறிப்பிடப்படாத, இடமாற்றக் குழுவில் உள்ளடங்காத, ஒரு குழுவை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைத்திய சேவைகள் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றக் கொள்கையின்படி விசேட வைத்தியர்களின் நியமனங்கள் இடம்பெறும் என வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான பொறுப்பு சுகாதாரத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், இடமாற்றக் கொள்கையை கண்காணிக்கவும் ஒப்புதல் அளிக்கவும் பொது சேவை ஆணைக்குழு பொறுப்பாக காணப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படும் விசேட வைத்தியர்கள் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படாத விசேட வைத்தியர்கள் என இரண்டு வகையான நியமனங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தகுதி அடிப்படையில் இந்த அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்கவும் நியமிக்கவும் ஒரு வெளிப்படையான நடைமுறை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

”இடமாற்றம் செய்யப்படாத (End Post) பதவிகளில் பணிபுரியும் விசேட வைத்திய நிபுணர்கள் போதனா வைத்தியசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதோடு அந்த வெற்றிடங்கள் இடமாற்றக் கொள்கைக்கு அமைய நிரப்பப்பட வேண்டும்,” எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விசேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பில் பொது சேவை ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு! | Tamil Leader | We Lead the Nation