Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இலங்கை உழைப்பாளிகள் வெளிநாடுகளில் பெருந்தொற்றிற்கு இரையாகும் நிலையில் இலங்கை உழைப்பாளிகளை மீண்டும் சௌதி அரேபியாவிற்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்!

T

The Leader Desk

நவம்பர் 29, 2020 • 11:50 AM

இலங்கை உழைப்பாளிகள் வெளிநாடுகளில் பெருந்தொற்றிற்கு இரையாகும் நிலையில் இலங்கை உழைப்பாளிகளை மீண்டும் சௌதி அரேபியாவிற்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் ஆரம்பக் கட்டமாக நேற்று (28) அதிகாலை 60 ஆண் பணியாளர்கள் சௌதி அரேபியாவிற்குச் சென்றுள்ளனர்.
  • இன்றைய நிலையில் கொரோனா தொற்றினால் 100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணித்துள்ளனர்.
  • அக்காலத்தில் சௌதி அரேபியால் உள்ள வெளிநாட்டு உழைப்பாளிகளை தமது நாட்டுக்கு வரவழைப்பதும் நிறுத்தப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

இதன் ஆரம்பக் கட்டமாக நேற்று (28) அதிகாலை 60 ஆண் பணியாளர்கள் சௌதி அரேபியாவிற்குச் சென்றுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று ஆரம்பக் கட்டத்தில் தொழில் ஒப்பந்தக் காலம் முடிவடைந்தமை, தொழில் செய்யும் இடங்களில் இன்னல்கள் காரணமாக தப்பியோடியமை, நோயாளிகளாக ஆகியமை போன்ற காரணிகளால் தொழில் இழந்தவர்கள் மற்றும் சட்டரீதியாக இந்நாட்டிற்கு திரும்பி வரக் கூடிய ஆயிரக்கணக்கானோர் கடந்த மார்ச் மாதம் தமது கஷ்டங்களை அரசாங்கத்திடம் கூறி தம்மை இந்நாட்டுக்கு வரவழைக்குமாறு கோரினர்.

இன்றைய நிலையில் கொரோனா தொற்றினால் 100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பெருந்தொற்று காலத்தில் விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டிருந்தமையால் அவர்களை இநநாட்டுக்கு வரவழைக்க முடியாத போதிலும், பெருந்தொற்று காலத்தில் தனிமைப்படுத்தல் வசதிகள் குறைவாக இருந்தமையால் அழைத்து வர முடியாதெனக் கூறி அரசாங்கம் கடந்த 10 மாத காலமாக அந்த இலங்கையர்களை கவனிக்காது விட்டிருந்தது.

அக்காலத்தில் சௌதி அரேபியால் உள்ள வெளிநாட்டு உழைப்பாளிகளை தமது நாட்டுக்கு வரவழைப்பதும் நிறுத்தப்பட்டிருந்தது. சௌதி அரேபியாவிலிருந்து வெளிநாட்டு உழைப்பாளர்கள் கடந்த சில நாட்களாக வரத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் பணியாற்றும் உழைப்பாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமை, உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள், உரிமைகள் மீறப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பேற்காமை போன்றவற்றுக்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏஜன்சிகளிடம் முறையிட்ட போதிலும் எந்த வித பதிலும் கிடைக்கவில்லை.

ஆனால் வெளிநாடுகளுக்கு அனுப்பும் போது தொழில் ஏஜன்ஸிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அமைச்சர் தலையிட்டு எடுக்கப்பட்ட நடவடிககை காரணமாக புதிதாக நபர்களை அனுப்ப தொழில் ஏஜென்ஸிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...