Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
சினிமா

‘விடாமுயற்சி’க்கு பதிலாக ‘காதலிக்க நேரமில்லை’

T

The Leader Desk

ஜனவரி 3, 2025 • 4:48 PM

‘விடாமுயற்சி’க்கு பதிலாக ‘காதலிக்க நேரமில்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத காரணத்தினால் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
  • கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இந்த படம் ஜனவரி 14ஆம் திகதி ரிலீசாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
  • மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் சிங்கிள் பாடலாக வெளியிடப்பட்ட நிலையில், அந்த பாடல் தற்போது 14 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
எழுத்து அளவு:

எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத காரணத்தினால் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், ’விடாமுயற்சி’ பொங்கல் ரிலீஸ் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, பல திரைப்படங்கள் தங்களது ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளன.

அவற்றில் ஒன்றுதான் ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இந்த படம் ஜனவரி 14ஆம் திகதி ரிலீசாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் சிங்கிள் பாடலாக வெளியிடப்பட்ட நிலையில், அந்த பாடல் தற்போது 14 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...