மேல் மாகாணத்திலிருந்து யாரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளி மாகாணங்கள் எதற்கும் செல்ல முடியாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களுடன், சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை, மதங்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு, கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைய வேண்டுமென  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார தரப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்டு 2ம் கட்ட பரிசோதனையிலுள்ள கொவிட் – 19 வைரஸ் தடுப்பூசியை இந்நாட்டில் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லீட் நிவ்ஸ் இணையத்தளம் கூறுகிறது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியினால் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பில் கொரோனா வைரசினால் இறக்கும் முஸ்லிம்களின் உடலை நல்லடக்கம் செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித் துள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி