கொழும்புத் துறைமுக நகரின் செயற்கை கடற்கரைக்கு சொந்தமான கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர் கம்பஹா - அஸ்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவராவார்.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று, நேற்று (26) பொழுதுபோக்குக்காக கடலில் நீராடிக் கொண்டிருந்த போது மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். பின்னர், அவர் அணிந்திருந்த ஸ்நோர்கெல் ஆடை, பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல் போனவரைக் கண்டுபிடிக்க கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவின் நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் ரங்கல கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் இணைந்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், கொழும்புத் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.