இன்றிரவிலிருந்து தமது கடமைகளிலிருந்த விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.தற்போது நாட்டில் நடைபெறும் கொவிட் கட்டுப்படுத்தல் தடுப்பூசித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார கூறுகிறார்.

பசிஃபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள தொலைதூர தீவுகளில் ஒன்றான சமோவா நாட்டில் புதிய பெண் பிரதமராக தேர்வான ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபாவை பதவியேற்க விடாமல் தேர்தலில் தோல்வியடைந்தவரின் ஆதரவாளர்கள் விரட்டியடித்துள்ளனர்.

வங்காள விரிகுடா பகுதியில் வீசிய காற்று சூறாவளியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

2008-ம் ஆண்டில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு லாரிகள் அடிக்கடி மாயமாகின. அந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து 13 லாரிகள் மாயமானது.  அவற்றின் டிரைவர்களும், கிளீனர்களும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமலும் மர்மம் நீடித்து வந்தது.இதுதொடர்பாக, பிரகாசம் மாவட்டத்திலுள்ள ஓங்கோல் காவல் நிலையத்தில் மட்டும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 7 நாட்களில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20000க்கும் மேல் நாட்டின் சகல மாவட்டங்களிலிருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 10000 பேர் கொழும்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.கொவிட் செயலணியின் உத்தியோக புள்ளிவிவரங்களின்படி மே மாதம் 17ம் திகதி காலை 7.00 மணியிலிருந்து 24ம் திகதி காலை 6.00 மணிவரை கண்டறிய்ப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 21455.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதுர்தீன் ஆகியோர் சிஐடி யால் கைது செய்யப்பட்டு இன்றுடன் (மே 24) ஒரு மாதமாகின்றது.

பல நெருக்கடிகளுக்கு இடையே தாயகத்திலுள்ள தமிழர்கள் இயன்றளவில் தமது வீடுகளிலும் ஆலயங்களிலும் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கொழும்பில் தெருப்போராட்டம் என்பது தமக்கு பழக்கமானதென்றும் இன்று அத்தகைய போராட்டம் ஒன்றை,  மொழிப்போராட்டமாக, கொழும்பு மாநகரில் துறைமுக நகருக்கு உள்ளேயே வந்து நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் என சீன, இலங்கை அரசாங்கங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான 'யாஸ்' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டொன்று இருப்பதாக போலியான தகவல்களை கொடுத்து, எச்சரித்து தனது நாட்டுக்கு மேலாக, உயரமான வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த  பயணிகள் விமானத்தை பலவந்தமாக தரையிறக்கி, அதிலிருந்த ஊடகவியலா​ளரை கைது செய்யும் நடவடிக்கையை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நேற்று (23) முன்னெடுத்திருந்தார்

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி