ஆசிரியர் தொல்லையால் மாணவி ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் ஒடிசாவில் பதிவாகியுள்ளது.
தலைமை ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாமல் மாணவி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தீக்காயங்களுக்குள்ளான மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை சம்பவத்தில் மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது தீக்காயங்களுக்குள்ளான மற்றுமொரு மாணவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்