வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்படும் Manthri.lk தளம், ‘அனுர மீட்டர்’ என்ற ஒன்லைன் கண்காணிப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதாக
அறிவித்துள்ளது. இது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதி தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும்.
இந்தக் கண்காணிப்பின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட 22 உறுதிமொழிகள், பொருளாதார சீர்திருத்தம், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் மற்றும் அதிக பொது நலன் கொண்ட திட்டங்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்துகின்றன.
அனுர மீட்டரைப் புதுப்பிப்பதற்கான தகவல்கள், மூன்று மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன:
1) வெளியிடப்பட்ட மூலங்களில் உள்ளடக்கம்
2) RTI கோரிக்கைகளுக்குப் பெறப்பட்ட பதில்கள்
3) பயனர்களால் வழங்கப்பட்ட நம்பகமான தகவல்கள்
Manthri.lk பக்கத்தில் உள்ள Anura Meter ஐப் பார்வையிடுவதன் மூலம் பயனர்கள் தங்கள் யோசனைகள் மற்றும் தகவல்களுடன் பங்களிக்க அழைக்கப்படுகிறார்கள்.