Feature

"தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசியல் தீர்வைக் காண முடியாது. குறிப்பிட்ட காலவரையறைக்குள்

Feature

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அக்கட்சியின் பேச்சாளர்

Feature

உள்ளூராட்சிமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்கள் நியமனம் தொடர்பான

Feature

சீனி வரி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலஞ்ச ஊழல்

Feature

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள

Feature

LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் குவாலிபயர் 01 போட்டியில் Jaffna Kings வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

Feature

இந்திய ரூபாயில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கை

Feature

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை, எதிர்வரும் தைப்பொங்கல் தினத்துக்க முன்னர் இறுதி செய்துகொள்வதென, தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் தொடர் பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நாள்தோறும் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்புக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனைக் கூறினார்.

இச்சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

“சென்றவாரம் இன நல்லிணக்கம் சம்பந்தமான சர்வகட்சி குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டமாக அமைந்திருந்தது. இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் பேசப்பட்டது. அவர்களில் ஐவரை உடனடியாக விடுவிக்கக் கூடியதாக உள்ளதாகவும் மற்றவர்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் சில முன்மொழிவுகளை வழங்கவுள்ளதாக சட்ட மா அதிபர் கூறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

“படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டது. இதில், இராணுவம் சில நிலங்களை விடுவிப்பதற்கு இணங்கியுள்ளதாகவும் இது தொடர்பில், ஜனவரி 3ஆம் திகதி கூlவுள்ள தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

“மீண்டும் ஜனவரி 5ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மேலும் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை கூடி அரசியலமைப்பு விடயம் தொடர்பில் பேசவுள்ளோம்” என்றார்.  

இச்சந்திப்பில் நீதியமைச்சர், சட்ட மா அதிபர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகார அமைச்சினைச் சேர்ந்தோரும் பங்கேற்றிருந்தனர்.

அதேநேரம், இச்சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்கவில்லை.

Feature

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர்

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி