X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக மேலும் 9110 இலட்சம் ரூபா இழப்பீடு கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்குவதற்காக குறித்த கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால், இலங்கைக்கு இடைக்கால இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இதன் பிரகாரம் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அடையாளங்காணப்பட்டுள்ள 15,032 மீனவர்களுக்கு இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னரும் குறித்த காப்புறுதி நிறுவனத்தினால் இரண்டு தடவைகள் இடைக்கால இழப்பீட்டுத் தொகையாக 3480 இலட்சம் ரூபா மற்றும் 3350 இலட்சம் ரூபா மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீனவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குரிய பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த இடைக்கால இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.

X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும், அவர்களின் கப்பல் வகை, மீன்பிடிக்கும் முறை மற்றும் இழந்த வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் 80,000 ரூபா முதல் 2,40,000 ரூபா வரை நட்டஈட்டுத் தொகை கிடைக்கும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

X-Press Pearl கப்பல் விபத்திற்குள்ளானதன் பின்னர் மீனவர்களின் உபகரணங்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பிற்காகவும், பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மீன்களைப் பிடித்து உட்கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுக்கவும் நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையால் சுமார் 15,032 மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி