சுதந்திர தினம் என்பது இலங்கை தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் கருப்பு தினமாகவே இருந்து வந்துள்ளது! சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார்.