வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!
உலக நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாது வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.புதிய ஏவுகணை சோதனை ஒன்றை வட கொரியா செய்து பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு கரை பகுதியிலிருந்து நடத்தப்பட்ட சோதனையில் எந்த வகையான ஏவுகணை பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், சமீப காலமாக வட கொரியா சோதனை செய்து வரும் பலிஸ்டிக் (ballistic) ஏவுகணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.