'புகையிரத கடவையை அடைத்து வைத்து மக்களின் வயிற்றில் அடிக்காதே'! மட்டக்களப்பு போராட்டம்
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறங்கியாமடு புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவை அமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தமது வழமையான வீதி போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை கண்டித்தும் போக்குவரத்திற்கு விடுமாறு கோரி பிரதேச மக்களினால் இன்று (ஞாயிறு 17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.