ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே, சுமந்திரன் வயலை உழத் தொடங்கினார் எனத் தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார், அதன் பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் எனவும் கூறினார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21ஆவது ஆண்டு நினைவு நாள், இன்று (19), தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டப் பந்தலில் அஞ்சலி செலுத்திவிட்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம் எனவும் நிமலராஜன் படுகொலை, தமிழ் ஜனநாயகத்தை கொன்றது எனவும் கூறினார்.

இலங்கை ஜனநாயகம் என்பது சிங்களவரின் ஜனநாயகம், அது தமிழர்களை ஒடுக்குவதற்கு மாத்திரமே எனத் தெரிவித்த அவர், தமிழர்களின் ஜனநாயகம் என்பது, பாதுகாப்பான, பாதுகாக்கப்பட்ட தமிழர் தாயகம் வரும் போது தான் தமிழர் ஜனநாயகத்துக்கு உயிர் வரும் எனவும் கூறினார்.

நிமலராஜன் உயிருடன் இருந்திருந்தால், சுமந்திரனின் சதி முடிச்சுக்களை தனது பலம் வாய்ந்த எழுத்துகளால் அவிழ்த்து அம்பலப்படுத்திருப்பார் எனத் தெரிவித்த அவர், ஊழல் செய்யப்பட்ட தமிழ் எம்.பி.க்கள் பதவியில்  இருக்கும் வரை, தமிழர்கள் தங்கள் அரசியல் தீர்வைப் பெற முடியாது எனவும் கூறினார்.

பணம் பெறும் பெரும்பாலான தமிழ் எம்.பிக்கள் ஊமையாக இருப்பது, இது ஒட்டுமொத்த தமிழ் தலைமுறையும் சிங்களவர்களின் அடிமைகளாக மாற்றும் எனவும், அவர் சாடினார்.

'சுமந்திரன் தனது ஊழல் நடவடிக்கைகளை கேட்டபோது அனைவரையும் அச்சுறுத்தினார், ஆனால், சுமந்திரன் சிவாஜிலிங்கம் மீது அவதூறு வழக்கு தொடர மறுக்கிறார். அவர் ஒரு வழக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு சொன்ன ஊழல் குற்றச்சாட்டை சுமந்திரன் ஏற்றுக்கொள்கிறார் என்றே அர்த்தம்' என்றார்.

அத்துடன், தமிழ்நாடு தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்தவோர் ஆர்ப்பாட்டத்தையும் தாங்கள் எதிர்ப்பதாகத் தெரிவித்த அவர், ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பிணைப்பை முறிப்பதற்கு சுமந்திரனின் சதி இது எனவும் கூறினார்.

'நாங்கள் தெற்கே  மீன்பிடிக்க செல்லாததால், முதலில் சிங்கள மீனவர்கள் எங்கள் பகுதியில் மீன்பிடிப்பதையே எதிர்க்கிறோம். பாதுகாப்பான, தமிழர் தாயகம்   கிடைத்தவுடன், தமிழக மீனவர்களுடன் நாங்கள் சுமுகமான தீர்வுக்கு வருவோம்.

'நமது வடக்கு மற்றும் கிழக்கை ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு கடல் கடற்கரையுடன் எங்கள் பொதுவான மீன்பிடி பகுதியாக கூட இருக்கலாம். ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர் ஒற்றுமையையும் அழிக்க சுமந்திரன் கொழும்பு சிங்களவர்களை சமாதானப்படுத்த கடலில் படகை ஓட்டினார்.

'தமிழர்களின் விடுதலைக்கான கொள்கையில்  சுமந்திரன்  இல்லை என்பதில் தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்' என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி