சீனிக்கான தட்டுப்பாடை உருவாக்கி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையையும் மீறி கடைகளில் சீனி விற்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

வெள்ளைச் சீனியின் கட்டுப்பாட்டு விலை ரூ.122க இருக்கும் நிலையில், ரூ.135க்கு ஒரு கிலோ சீனி விற்கப்படுவதாகவும், பழுப்பு நிறச் சீனியின் கட்டுப்பாட்டு விலை ரூ.125 க இருந்த போதிலும் ரூ.138க்கு விற்கப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

சீனிக்கான வரியை நீக்கிவிட்டு விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, ராஜபக்ஷ குடும்பத்திற்கு நெருக்கமானதும், உள்நாட்டு பிரதிநிதித்துவம் கொண்டதுமான பிரமிட் வில்மான நிறுவனத்திடம் சீனி இறக்குமதிக்கான ஏகபோகத்தை அரசாங்கம் ஒப்படைத்துள்ளது.

என்றாலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு சீனி மாத்திரமல்ல, அரிசியும் கிடைக்காத நிலையில் அரிசி ஆலை உரிமையாளர்களினால் நிர்ணயிக்கப்பட்ட விலையையும் விட கூடிய விலைக்கு அரிசி விற்கப்படுவதாக பாவனையாளர்கள் கூறுகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி