அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால் இன்று  ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.

அத்துடன், போராட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டாலோ அல்லது சொத்து சேதம் ஏற்பட்டாலோ, அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என தலைமை நீதவான் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் 50 லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

ரீ - 56 துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டி - மோதரவான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி ஒன்று வலியுறுத்தியுள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட யோசனை, இன்று (08) கையளிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

சீனாவின் சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதைக் காலந்தாழ்த்துமாறு சீனாவிடம் இலங்கை கோரியுள்ளதை வௌிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைய ஆட்சி முறையையும் மற்றும் அரசாங்க அமைப்பையும் மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகளுடன் பல நாட்களாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒவ்வொரு கட்சியும் முன்வைத்த முன்மொழிவுகள் பங்குபற்றிய அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி